சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரையில் 600 கோடியில் டைடல் பார்க்! தென்மாவட்ட இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்!

Google Oneindia Tamil News

சென்னை: இருபது ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை அடையாறு பகுதியை கடந்து பழைய மகாபலிபுரம் சாலை பக்கம் பயணிக்க வேண்டும் என்றால் மக்கள் அஞ்சுவார்கள். அந்தளவுக்கு அப்பகுதி மக்கள் புழக்கம் இல்லாத பகுதியாகவே இருந்தது. இதையொட்டி இருந்த சென்னை தரமணி பகுதிகூட புதர்கள் மண்டிய பகுதியாகவே காட்சியளித்தது.

ஆனால் இந்த அச்சம் எல்லாம் 2000 வரைதான். மு.கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் இந்த பகுதியில் டைடல் பார்க் அமைக்கப்பட்டது. அதற்கு முன் ஐடி தொழில்நுட்ப உலகத்தின் கோட்டையாக ஹைதராபாத் தான் விளங்கியது. அந்த நம்பிக்கையை இந்த ஒரு தொழில்நுட்ப பூங்காவைத் திறந்ததன் மூலம் உடைத்துக் காட்டினார் மு.கருணாநிதி.
இந்த ஒரு தொழில்நுட்ப பூங்காவின் வருகையால் மாபெரும் மாற்றத்தை அடைந்தது தரமணி. ஒரு காலத்தில் ஒழுங்காகச் சாலைகள் கூட இந்தப் பகுதி இன்று வெளிநாடு போலக் காட்சி அளிக்கிறது.

 "ஐடிதாவணியாகும்.. மாட்டுத்தாவணி".. மதுரைக்கு சூப்பர் நியூஸ் சொன்ன ஸ்டாலின்.. வருகிறது டைடல் பார்க்

ஒளிமயமான ஒஎம்ஆர்

ஒளிமயமான ஒஎம்ஆர்

இன்று என்.ஆர்.ஐ பலர் தங்களின் கனவு வீட்டைத் தேடி வாங்கும் நகரமாக ஒஎம்ஆர் மாறி இருக்கிறது. இன்றைக்கு ஒஎம்ஆர் சாலை பணக்காரர்கள் புழங்கும் நகரமாக மாறி இருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழிலின் ஹாட் ஸ்பார்ட் ஆக மாறி இருக்கிறது. திரும்பிய பக்கம் எல்லாம் வானத்தை முட்டும் அளவுக்குக் கட்டுமானங்கள். 20 தளங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு, பன்னாட்டு நிறுவனங்கள், மால்கள், அதிநவீன திரையரங்குகள் என இதன் வளர்ச்சியைக் கணிக்கவே முடியாதபடி வளர்ந்துள்ளது. இவ்வளவு வளர்ச்சிக்கும் ஒரே காரணம் தரமணி டைடல் பார்க். தமிழ்நாட்டில் பொறியியல் படித்துவிட்டு, வேலைக்காக பெங்களூரு, ஹைதராபாத் என்று அலை பாய்ந்து கொண்டிருந்த இளைஞர்களின் வருமானக் களமாக மாறியுள்ளது தரமணி. அதை மாற்றியவர் மு.கருணாநிதி. இவர் அமைத்துத் தந்த டைடல் பார்க்தான் இவ்வளவு வளர்ச்சிக்கும் காரணம்.

இரண்டரை லட்சம் பேர் வேலை

இரண்டரை லட்சம் பேர் வேலை

ஒரு காலத்தில் மக்கள் பயணிக்கவே பயந்த சாலை, இன்று பரபரப்பான என்ஹெச் ரோடு மாறியுள்ளது. பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் என அடுத்தடுத்த வளர்ச்சிகளை எட்டி வருகிறது.
"ஏறக்குறைய இரண்டரை லட்சம் பேர் இந்த டைடல் பார்க் அமைந்துள்ள ஒஎம்ஆர் சாலையில் மட்டுமே வேலை பார்க்கிறார்கள்" என்கிறார் 25 ஆண்டுகளாகத் தனியே ஒரு ஐடி நிறுவனத்தை நடத்தி வரும் சுந்தரராஜன்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தொழில்துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பூர், விழுப்புரத்தில் 77 கோடி ரூபாயில் அமைய உள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் தரமணி டைடல் பார்க்கில் 212 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான மையத்தைத் திறந்து வைத்தார். நாட்டில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. உற்பத்தியில், இந்திய அளவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே தலைசிறந்த இடத்தைத் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. 2030-ஆம் ஆண்டில், நமது மாநிலத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்ற இலக்கை முன்வைத்துள்ளோம் என்றார். இந்நிலையில் சென்னையைத் தாண்டி ஐடி துறையில் புரட்சி ஏற்படுத்த வேண்டி, மதுரையில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதனால் 10,000 இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவர் என்றும் அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.

மதுரையில் டைடல் பார்க்

மதுரையில் டைடல் பார்க்

மேலும் தரமணி டைடல் பார்க்கில் 212 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான மையத்தைத் திறந்து வைத்தார். நாட்டில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. உற்பத்தியில், இந்திய அளவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே தலைசிறந்த இடத்தைத் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. 2030-ஆம் ஆண்டில், நமது மாநிலத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்ற இலக்கை முன்வைத்துள்ளோம் என்றார். இந்நிலையில் சென்னையைத் தாண்டி ஐடி துறையில் புரட்சி ஏற்படுத்த வேண்டி, மதுரையில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் 10,000 இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவர் என்றும் அவர் நம்பிக்கை அளித்துள்ளார். இதனால் மதுரை மாட்டுத்தாவணி விரைவில் ஐடி தாவணியாக மாற உள்ளது.

80 சதவீதம் பேர் தென் தமிழ்நாடு ஊழியர்கள்

80 சதவீதம் பேர் தென் தமிழ்நாடு ஊழியர்கள்

இந்தத் தொழில்நுட்ப பூங்கா வந்தால் மதுரை எந்த அளவுக்கு மாற்றமடையும் என சுந்தரராஜனிடம் கேட்டோம். அவர், "இந்தத் திட்டம் மிகச் சிறப்பான திட்டம். ஏனென்றால் சென்னை ஒஎம்ஆர் சாலையில் வேலைப் பார்க்கும் இரண்டரை லட்ச இளைஞர்களில் 80 சதவீதம் பேர் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஊரைவிட்டு சென்னைக்கு வந்துதான் வேலைத் தேட வேண்டும் என நிலையை இந்த மதுரையில் உருவாக உள்ள தொழில்நுட்ப நகரம் மாற்றும்" என்று நம்பிக்கைப் பொங்க சொன்னார். "தகவல் தொழில் துறையைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட டைடல் பார்க் உலக அளவில் மிகமிக முக்கியமானது. ஐடி துறை சார்ந்த சேவை தொழிலில் தமிழ்நாட்டை அதுதான் முக்கியமான மாநிலமாக மாற்றியது. 1996க்குப் பிறகுதான் தகவல் தொழில்நுட்ப உலகில் y2k பிரச்சினை அதிகம் விவாதத்திலிருந்த காலம். அந்தக் காலகட்டத்தில்தான் இந்த பார்க் சென்னைக்கு வந்தது. இது வந்த பிறகே ஒஎம்ஆர் சாலை ஐடி காரிடாராக மாறியது.

மதுரைக்கு என்ன லாபம்?

மதுரைக்கு என்ன லாபம்?

"ஐடி துறை சார்ந்த வேலை என்றால் தமிழ்நாட்டில் சென்னை, கோவை மட்டும்தான் என்ற நிலை உள்ளது, தென் தமிழகத்தில் இருப்பவர்கள்தான் பெரும்பாலும் சென்னை ஐடி நிறுவனங்களுக்கு வேலை தேடி வருபவர்களாக உள்ளனர். இன்று ஒஎம்ஆர் சாலையில் ஐடி துறையில் 2 முதல் 3 லட்சம் வரை வேலை பார்க்கிறார்கள். அதில் 80 சதவீதம் பேர்கள் தென் தமிழகத்தைச் சேர்த்தவர்கள். அவர்கள் மதுரையில் இந்தத் தொழில்நுட்ப பூங்கா அமைந்தால் சென்னைக்கு வரவே தேவையில்லை. மதுரை ஒரு ஐடி ஹப் ஆக மாறிவிடும்." என்கிறார் சுந்தரராஜன். கடந்த 25 ஆண்டுகளாகத் தனியே ஒரு ஐடி நிறுவனத்தை நடத்தி வரும் சுந்தரராஜன் இன்று வருடத்திற்கு 20 கோடி வர்த்தகம் செய்யும் தொழில் முனைவோராக மாறியதற்குச் சென்னையில் வந்த டைடல் பார்க் தான் காரணம் என்கிறார். இவர் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களிலிருந்து வேலைகளைப் பெறும் போது அவர்கள் சென்னை ஐடி துறைக்கு பெயர் எடுத்த நகரம். ஆகவே வேலையை நம்பித் தரலாம் என முடிவு எடுப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக டைல் பார்க் இருந்ததை அனுபவ ரீதியாக நான் உணர்ந்துள்ளேன் என்கிறார்.

English summary
What is Madurai Tidel Park why it's important: MK Stalin has announced that a Tidal Park will be set up in Madurai at a cost of Rs 600 crore, calling for a revolution in the IT sector beyond Chennai. He also assured that 10,000 youths will get employment due to this. Thus the Madurai Mattuthavani is soon to become the IT hub.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X