Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

6000 ரூபாய் இருக்கு.. "இவங்களுக்கு" கூடுதல் நிவாரணம் உண்டு.. தமிழக அரசு நம்பிக்கை.. துள்ளும் சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எண்ணூரில் எண்ணெய் பாதித்த வீடுகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உறுதி தந்துள்ளது..!!

மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதியை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

6000 rupees Chennai flood relief fund and additional relief funds will be provided to Ennor oil affected houses, TN Government

புயல்: சென்னையை உலுக்கிஎடுத்து சென்ற மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மட்டுமல்லாமல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்து தவித்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே, கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.. ஆனால், இந்த தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்று, சென்னையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார்.

நிவாரண தொகை: அந்த மனுவில், "தமிழக அரசு நிவாரண தொகை வழங்குவது பாராட்டக்குரியது.. அந்த தொகையை ரேஷன் கடைகள் மூலம் அல்லாமல் நேரடியாக கொடுக்க வேண்டும்.. ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக கொடுப்பதால் அதிகளவில் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது.. நியாயமாக பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது..

எனவே, பல்வேறு திட்டங்களுக்கான தொகையை அரசு, நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தி வரும் நிலையில், இந்த நிவாரண பணத்தையும் வங்கி கணக்கில் செலுத்துவதில் அரசிற்கு எந்தவித சிரமும் இருக்காது என்பதால், புயல் வெள்ள நிவாரண நிதியை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணூர்: இந்நிலையில், எண்ணூரில் எண்ணெய் பாதித்த வீடுகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உறுதி தந்துள்ளது.. சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன், நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது:

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 4 மட்டும் இன்று செயல்படவில்லை. தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நாளை பள்ளியை திறக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும்.. குடிநீர், கழிவறை, கொசுக்கள் பாதிப்பு இல்லாமல் இருக்க பொது சுகாதாரத்துறை மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடைசி தண்ணீர் வடியும் வரை பணிகள் மேற்கொள்ளப்படும்.

வெள்ள நீர்: வெள்ளம் வடிந்த பகுதிகளில் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், சேற்றுப்புண், சுவாச பிரச்சனை போன்றவை ஏற்படும். எலி காய்ச்சல் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதனால், அதற்கான மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டும். எண்ணூரில் எண்ணெய் பாதித்த வார்டு 1, 2 பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து சிபிசிஎல் நிறுவனத்துடன் ஆலோசனையும் நடத்தினார்கள்.. இதில் தனிக்குழு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், எண்ணெய் பாதிப்பை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன..

அவர்களுக்கு கூடுதலாக நிவாரண நிதி வழங்கப்படும். நிவாரணப் பணிகள் முடிந்தாலும் மறுவாழ்வு பணி, மீட்பு பணி போன்றவை தொடர்ந்து நடைபெறும்" என்றார் ராதாகிருஷ்ணன்.

எடப்பாடி: முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, "சென்னை மணலி, மணலிப்புதூர், எர்ணாவூர் போன்ற பகுதிகளில் மழை நீருடன் அப்பகுதியில் இயங்கிவரும் ஆலைகளின் ஆயில் கழிவுகளால் சுமார் ஐந்தாயிரம் குடியிருப்புகளில் மக்கள் வாழ முடியாத அவலம் ஏற்பட்டுள்ளதால், 25,000 ரூபாய் நிவாரணம் வழங்குவதுடன், எண்ணெய் கழிவுகளை தகுந்த தொழில்நுட்ப உதவியுடன் தூய்மைப் படுத்தும் பணியினையும் செய்துதர வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள் கோரிக்கை: இதனிடையே, இங்குள்ள எண்ணெய் நிறுவனங்களை மூட வேண்டும் என்ற கோரிகைகளை, எண்ணூர் மீனவர்கள் எழுப்ப துவங்கி உள்ளனர்.. "எங்களுக்காக மட்டும் இதை சொல்லவில்லை.. கடலில் வாழும் கடல்சார் உயிரினங்களின் நலனுக்கும் சேர்த்தே இந்த கோரிக்கையை வைக்கிறோம்.. இந்த எண்ணெய் கழிவினால், உடலில் அரிப்பு, சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதால், இதற்கு ஒரு முற்றுப்புள்ளியை தமிழக அரசு வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+