63 சத்துக்கள் இருந்தாலும் அகத்திக்கீரை ஷாக்.. இந்த ஒரு பொருளுடன் சேர்த்தால்? டாக்டர்கள் வார்னிங்
சென்னை: ஆரோக்கியம் என்று வந்துவிட்டால் நம் ஊரில் பலரும் முதலில் பரிந்துரைப்பது அகத்திக் கீரையைத்தான்.. 63 வகையான சத்துக்கள் நிறைந்த இந்த அதிசயக் கீரை, உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு குடல் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது.. ஆனால் இத்தனை நன்மைகள் கொண்ட இந்த மூலிகைக் கீரை, சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் விஷமாக மாறக்கூடும் என்பது பலருக்கும் தெரியாத அதிர்ச்சித் தகவல்.. குறிப்பாக ஒரு குறிப்பிட்ட பழக்கம் உள்ளவர்கள் அகத்திக் கீரையைச் சாப்பிடுவது தற்கொலைக்குச் சமம் என்று சித்த மருத்துவம் எச்சரிக்கிறது..
நவீன காலத்தில் உணவு முறைகள் மாறிவிட்ட நிலையில், எதை எதனுடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்ற அடிப்படை அறிவு பலரிடம் இல்லை.. அகத்திக் கீரையைச் சாப்பிடும்போது மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்..

யாரெல்லாம் சாப்பிட கூடாது
வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு இருமுறை மட்டுமே இதனைச் சாப்பிட வேண்டும்.. தினமும் அகத்திக் கீரையைச் சாப்பிட்டு வந்தால், அது உடலில் உள்ள பித்தத்தை அதீதமாக உயர்த்தி, ரத்தத்தில் நச்சுத்தன்மையை உண்டாக்கும்.. குறிப்பாகச் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் டயாலிசிஸ் செய்து கொள்பவர்கள் இந்தக் கீரையைத் தவிர்ப்பதே நல்லது.. ஏனெனில் இதில் உள்ள தாதுக்கள் சிறுநீரகத்திற்கு அதிக வேலையைக் கொடுத்துப் பாதிப்பைத் தீவிரப்படுத்தும்..
பொதுவாகவே அகத்திக் கீரைச் சாப்பிடும் நாளில் கோழி இறைச்சி அல்லது காரமான உணவுகளைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.. இது செரிமான மண்டலத்தில் கடும் மோதலை உண்டாக்கி வயிற்றுப்போக்கு அல்லது வாந்தியை ஏற்படுத்தும்.
தாறுமாறு ரத்த ஓட்டம்
மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்பவர்கள் இந்தக் கீரையைச் சாப்பிடும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.. ஏனெனில் சில மருந்துகளின் வீரியத்தை இந்தக் கீரை மொத்தமாகச் செயலிழக்கச் செய்துவிடும்.. ஆரோக்கியமானது என்று நினைத்து நாம் செய்யும் சிறு தவறுகள் தான் பெரிய ஆபத்தில் முடிகின்றன..
அகத்திக் கீரை சாப்பிட்ட அன்றோ அல்லது அதற்கு அடுத்த நாளோ மது அருந்தினால், அது உடலில் பயங்கரமான ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகிறது.. இது ரத்த ஓட்டத்தைத் தாறுமாறாகப் பாதிப்பதோடு, இதயத் துடிப்பை திடீரென அதிகரிக்கச் செய்து மூச்சுத் திணறலை உண்டாக்கும்.. சில நேரங்களில் இது மாரடைப்பு வரை கொண்டு சென்று மரண பயத்தைக் காட்டும் அளவுக்குத் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும்..
இயற்கை வரப்பிரசாதம்
இயற்கை நமக்குக் கொடுத்த வரப்பிரசாதமான இந்தக் கீரையைச் சரியான முறையில், சரியான துணைக் உணவுகளுடன் சாப்பிட்டால் மட்டுமே அது மருந்தாகச் செயல்படும்.
மருந்து சாப்பிடுபவர்கள், கோழிக்கறி போன்ற உணவுகளை உண்பவர்கள், அகத்திக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.. இல்லையெனில், இது மாரடைப்பு மற்றும் இதயம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். வரும்முன் காப்பதே சிறந்தது என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த உண்மைகளைத் தெரிந்து கொண்டு ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வோம்..ஸஸ












Click it and Unblock the Notifications