₹600 கோடி "நடுக்கம்".. சட்டென முகம் மாறிய எடப்பாடி.. கைவிட்ட மேலிடம்.. அதென்ன 30 கணக்கு.. கூல் திமுக

எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி ஆதரவு பெருமளவு கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமியை டெல்லி, பெருமளவு கை கொடுத்து உதவவில்லை என்றே சொல்கிறார்கள்.. இதுதான் தற்போதைய ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி எதற்காக டெல்லி சென்றார் என்ற யூகங்கள் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும், அது தொடர்பான செய்திகளும் அவ்வப்போது கசிந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்தவகையில், அமித் ஷாவை சந்தித்தபோது, எடப்பாடி + ஓபிஎஸ் என இரு தரப்பையும் ஒன்று சேர்ந்து செயல்படும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது..

 அமித்ஷா

அமித்ஷா

இப்படி தனித்தனியாக செயல்பட்டால், ஓட்டுக்கள் பிரிவது சரியல்ல என்றும் அமித்ஷா கவலையை வெளிப்படுத்தியதாக தெரிகிறது.. ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமியோ, வழக்கம்போலவே மறுத்தாராம்.. ஓபிஎஸ்ஸுடன் இணைவது சாத்தியமே இல்லை என்றும் தெளிவுபடுத்தியதாக கூறுகிறார்கள்.. இதைதவிர வேறு சில விஷயங்களை அமித்ஷாவிடம் விவாதித்ததாகவும் சொல்கிறார்கள். இந்த சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

மழுப்பல்

மழுப்பல்

அப்போது, காவிரி கோதாவரி நதி நீர் இணைப்பு போன்ற பிரச்சனைகளுக்காவே அமித்ஷாவை சந்தித்ததாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் தந்திருந்தார்.. ஆனால், இந்த விளக்கமே அவர் மீதான விமர்சனத்தை முன்வைத்துவிட்டது.. காவிரி கோதாவரி பிரச்சனைக்காக, ஒரு உள்துறை அமைச்சரை, எடப்பாடி அவசர அவசரமாக சென்று சந்திக்க வேண்டுமா? ஏன், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்திருக்கலாமே? சம்பந்தமே இல்லாமல் ஒரு மழுப்பலான பதிலை சொன்னாலும், பொருத்தமாக எடப்பாடி சொல்லியிருக்க வேணாமா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

 666+ கோடிரூபாய்

666+ கோடிரூபாய்

அமித்ஷாவை எடப்பாடி சந்தித்த அன்றைய தினமே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீடியாக்களின் கவனத்தை அன்றைய தினம் ஈர்த்தனர்.. அவர்கள் பேசும்போது, "பெங்களூரில் அங்கிருக்ககூடிய விசாரணைக்குழு லோக்ஆயுக்தா என்று சொல்லக்கூடிய ஊழல் தடுப்பு மன்றம், எடப்பாடியின் சம்பந்தி மகன் மீது 12 கோடி ரூபாய் லஞ்சப்புகார் உள்ளது.. எடியூரப்பாவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சருக்கு 666 கோடி ரூபாய் கட்டிடம் ஒன்றை கட்டுவதற்காக 12 கோடி ரூபாய் லஞ்சப்பணத்தை கொண்டு போய், தந்துள்ளார்.. வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.. இந்த வழக்கு, எடப்பாடிக்கு அச்சத்தை தந்திருக்ககூடியதாக இருக்கலாம்..

 ஓவர் நெருக்கடி

ஓவர் நெருக்கடி

இன்னொரு பக்கம் கொடநாடு வழக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, ஆதரவாளர்களிடம் ரெய்டு, என நாலாபக்கமும் நெருக்கடிகள் றெக்கை கட்டி பறக்கவும், பயத்தில் டெல்லியில், தஞ்சம் அடையவே சென்றிருக்கிறார்" என்று விலாவரியாக விளக்கம் தந்து கொண்டிருந்தார்கள். ஆக மொத்தம், ஓபிஎஸ் தரப்பு பற்றி அமித்ஷாவிடம் பேசப்பட்டதா? அல்லது வழக்குகளில் இருந்து மீள்வது குறித்து பேசப்பட்டதா? என்று உறுதியாக யாருக்கும் தெரியவில்லை..

 25 மேஜர் மாவட்டம்

25 மேஜர் மாவட்டம்

ஆனால், அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி ஒன்றுமட்டும் உறுதியாக சொன்னாராம்.. "கடந்த சில வாரங்களாகவே, தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் பயணம் செய்து வருகிறேன்.. எங்குமே ஓபிஎஸ்க்காக பலம் காணப்படவில்லை.. அதனால் இல்லாவிட்டாலும் கட்சி பலமாகவே என்றைக்கும் இருக்கும்.. நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் எண்ணிக்கை அளவில் தம்முடைய ஆதரவாளர்களே அதிகம் இருக்கிறார்கள்.. அந்த அடிப்படையில் பாஜக மேலிடம் தன்னுடன் மட்டுமே இனி தேர்தல் மற்றும் அரசியல் உறவை தொடர வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேட்டுக்கொண்டாராம்..

சோர்ஸ்கள்

சோர்ஸ்கள்

எனினும் அமித்ஷா, தான் சொல்ல வந்த விஷயத்தில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், வழக்குகளின் பிடியில் சிக்கி உள்ள நிலையில், கைதூக்கி விட பெரிதாக மேலிடம் முன்வரவில்லையாம்.. குறிப்பாக, டெண்டர் விவகாரம் குறித்து எடப்பாடிக்கு எதிரான முக்கிய தகவல்களை, இங்கு மாநிலத்துக்கு பாஸ் செய்வதே டெல்லியில் உள்ள சில சோர்ஸ்கள்தானாம்.. அதனால், எடப்பாடி விஷயத்தில் ஏதோ ஒரு "தேர்தல் கணக்கு" போட்டு மேலிடம் வேலை செய்வதாகவே கூறுகிறார்கள்..

டைம்

டைம்

மேலும், தேர்தலுக்கு இன்னும் டைம் இருப்பதால், இப்போதைக்கு இதுபோன்ற பிரச்சனைகளில் தலையிடவும் விரும்பவில்லை என்றே தெரிகிறது.. இது எடப்பாடி டீமுக்கு பெருத்த வருத்தத்தை உண்டுபண்ணி வருகிறதாம்.. அதுமட்டுமல்ல, தற்சமயம், பெங்களூர் வழக்கில் எடப்பாடி சம்பந்தி மகன் சிக்கி உள்ள நிலையில், உண்மையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு, டெல்லி உதவ போகிறதா? தன் ஆதரவை தர போகிறதா? என்பதெல்லாம் இந்த கேஸை வைத்துதான் முடிவு செய்யப்படும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இந்த வழக்கில் எடப்பாடிக்கு கை கொடுத்து உதவினால், அடுத்தடுத்து உள்ள வழக்குகளும் சுமூகமாக முடிய வாய்ப்பிருக்கும், இல்லாவிட்டால், எடப்பாடியின் நெருக்கடிகளால் அதிக லாபம் அடைவது திமுகவை விட பாஜகதான் என்றும் அறுதியிட்டு சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+