சரிவை நோக்கி சென்னை.. இன்று ஒரே நாளில் 695 பேர் தொற்றால் பாதிப்பு.. டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகம்!
சென்னையில் இன்று 695 பேருக்கு மட்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மேலும் மேலும் குறைந்து வருகிறது.. சென்னையில் இன்று ஒரே நாளில் 695 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்... நேற்று 747 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து வருவது ஆறுதலை தந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே தொற்று வேகமாக குறைந்து வருகிறது... இதற்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் சீரிய முயற்சிதான் காரணம்.. மழைக்காலத்தில் இந்த வைரஸ் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது குறைவாகவே பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,75,518 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,029 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 10,983 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 695 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 197077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 144 புதிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல, திருவள்ளூர் 115, கோவையில் 209, கடலூர் 45, திருச்சி 42, சேலம் 146, திருப்பூர் 99 என்ற அளவில் பாதிப்பு இருந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் இரட்டை இலக்கத்திலேயேதான் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி உள்ளது.. வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 4,029 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 75 ஆயிரத்து 518 ஆக அதிகரித்துள்ளது.. அதேபோல, வைரஸ் தாக்குதலுக்கு இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர்... இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 983 ஆக அதிகரித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications