தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, நாகை, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அது போல் உள்மாவட்டங்களான புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். தென்மேற்கு அரபிக்கடல், குமரிக் கடல், மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசும்.
வரும் 29, 30 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக் கடல், தென்மேற்கு அரபிக் கடல், அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications