தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. மாநில தேர்தல் ஆணைய செயலாளராக வெங்கட பிரியா நியமனம்
சென்னை: தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை (IAS officers) இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக வெங்கட் பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாராக எஸ் பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் என் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
* அதன்படி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக வெங்கட் பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெங்கட பிரியா உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அரசு கூடுதல் செயலாளராக இருந்து வந்தார்.
* தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாராக எஸ் பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* துாத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சஜ்ஜன்சிங் ரா சவான்
* பொது மற்றும் மறுவாழ்வுத்துறை அரசு சிறப்பு செயலாளராக இருந்த சஜ்ஜன்சிங் ரா சவான் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணைச்செயலாளராக பானோத் ம்ருகேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னதாக தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக இருந்து வந்தார்.
* சமூக நலத்துறை இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனராக சரண்யா அரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன செயல் அலுவலராக ஸ்வேதா சுமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
முன்னதாக கடந்த வாரம் தான் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகி இருந்தது. திருச்சி டிஐஜி வருண்குமார் உள்பட சில முக்கிய அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்திருந்தது.
* திருச்சி டிஐஜி வருண்குமார் சென்னை சிபிசிஐடி டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
* தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக டிஜிபியாக இருந்த பிரமோத் குமார் ஊர்க்காவல் படை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
* குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபி ஆயுஷ் மணி திவாரி மின் உற்பத்தி கழக ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
* ஊர்க்காவல் படை ஐ.ஜியாக இருந்த ஜெயஸ்ரீ குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
தமிழக புதிய டிஜிபி யார்?
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக புதிய டிஜிபி குறித்து அறிவிப்பு நாளை வழியாக கூடும் என்று சொல்லப்படுகிறது. தற்போது டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் வரும் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் ஐபிஎஸ் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் வெங்கட்ராமன். யுபிஎஸ்சி தேர்வில் தமிழக கேடரில் 1994 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications