மாநில தன்னாட்சி, இருமொழி கொள்கை, மதுரையில் துணை தலைமை செயலகம்.. தவெக கொள்கையில் 7 முக்கிய அம்சங்கள்
சென்னை: இரு மொழிக்கொள்கை, ஒன்றிய அரசு, வர்ணாசிரம ப்ரயோகம், வைகை நதி நாகரிகம், மாநில தன்னாட்சி உரிமை, ஆளுநர் பதவி அகற்றம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தங்களின் கொள்கையாக அறிவித்து உள்ளது.
திருவள்ளுவர், அம்பேத்கார், பெரியார், காமராஜர், வேலுநாசத்தியார், அஞ்சலை அம்மாள் உட்பட 6 பேர் அரசியல் வழிகாட்டிகள் என்று நடிகர் விஜய் அறிவித்து உள்ளார்.இந்த ஐந்து தலைவர்களின் கொள்கை அடிப்படையில் கட்சி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் அதிகார்பூர்வ கொள்கையாக மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இவை வரிகளாக எழுதப்பட்டு காட்சிகளாக திரையில் வைக்கப்பட்டு உள்ளது.

அதோடு தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் தந்தை பெரியார் விஜய்க்கு வழிகாட்டி அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. பெரியாரை முன்னிறுத்தி தமிழக வெற்றி கழகம் தனது அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க உள்ளதை தெளிவுபடுத்தி உள்ளது.
7 முக்கிய அம்சங்கள்: இரு மொழிக்கொள்கை, ஒன்றிய அரசு, வர்ணாசிரம ப்ரயோகம், வைகை நதி நாகரிகம், மாநில தன்னாட்சி உரிமை, ஆளுநர் பதவி அகற்றம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தங்களின் கொள்கையாக அறிவித்து உள்ளது.

1. இருமொழி கொள்கை.. பின்பற்றப்படும்.
2. ஆளுநர் பதவி ஒழிக்கப்படும்.
3. பழமைவாத பழக்கவழக்கங்களை ஒழிப்பதை தங்களது கட்சியின் முக்கிய கொள்கையாக தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது
4. மாநிலத் தன்னாட்சி உரிமை மீட்பு என்பதை தங்களது முக்கிய கொள்கையாக தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.
5. வர்ணாசிரம கொள்கைகள் எந்த வகையில் இருந்தாலும் அதை முழுமையாக தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கும் என கொள்கை அறிவிப்பு. சமூகத்தை பிராமணர்கள் சத்திரியர்கள் சூத்திரர்கள் வைசியர்கள் நான்கு பிரிவுகளாக பிரித்து வைப்பது தான் வர்ணாசிரமக் கொள்கை அதை முழுமையாக எதிர்ப்பதாக அறிவிப்பு.
6.விகிதாச்சார இட ஒதுக்கீடு என்பதை தங்களது ரிசர்வேஷன் கொள்கையாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது
7. மதுரையில் துணை தலைமை செயலகம் அமைக்கப்படும்.
உறுதிமொழி: முன்னதாக நடிகர் விஜய் மாநாட்டு மேடைக்கு வந்ததும்.. கட்சியின் உறுதிமொழி பாடப்பட்டது.
"நமது நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து, வீரத்துடன் போராடி, உயிர் நீத்த எண்ணெற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்;
நமது அன்னைத் தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த, மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில், தொடர்ந்து பாடுபடுவேன்;
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்புள்ள தனி மனிதனாக செயல்படுவேன்;
மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப்பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராக கடமையாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்;
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்;
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன், என்ற தமிழக வெற்றிக் கழக உறுதிமொழி ஏற்கப்பட்டது.












Click it and Unblock the Notifications