7 "காவிகள்".. மாறி மாறி டெல்லிக்கு போன்! பாஜகவில் சீக்ரெட் வார்.. சீனுக்குள் வந்த ரஜினி? ரூட் மாறுதே
சென்னை: 2024 லோக்சபா தேர்தலுக்காக இப்போதே பாஜக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வரும் நிலையில், பாஜக முக்கியமான சில நியமனங்களை மேற்கொள்ள போவதாக டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2024 லோக்சபா தேர்தலுக்கு இன்று இரண்டு வருடங்களுக்கும் குறைவான கால அவகாசமே உள்ளது. இந்த நிலையில்தான் இந்த தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது.
அதற்கு முன்பாக கர்நாடக மாநில தேர்தல், குஜராத் மாநில தேர்தல் போன்ற தேர்தல்கள் நடக்க உள்ளன. இந்த தேர்தல்களுக்கு முன்பாக பாஜக பல்வேறு மாநிலங்களில் ஆளுநரை மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ஆளும் பாஜக செய்து வருகிறதாம்.
அன்று எச்.ராஜா.. இன்று ரஜினிகாந்த் - யாருங்க ஆளுநர்? நல்லா கொளுத்திப் போடுறாங்க

பாஜக
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஆளுநர்கள் மாநில ஆட்சி அதிகாரங்களில் தலையிடுவதாக புகார் உள்ளது. மாநில ஆட்சியில் ஆளுநர்கள் மூக்கை நுழைத்து அங்கு அரசு இயந்திரம் செயல்பட விடாமல் தடுப்பதாக புகார்கள் உள்ளன. தமிழ்நாடு, தெலுங்கானா, மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநில முதல்வர்கள் இது தொடர்பாக கடுமையான புகார்களை வைத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் 7 மாநிலங்களில் புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

7 மாநிலம்
அதன்படி தெலுங்கானா, பீகார், உத்தர பிரதேசம், கர்நாடகா, இமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. இதில் குஜராத், தெலுங்கானாவில் பதவிக்காலம் இன்னும் முடியவில்லை. இருந்தாலும் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானாவை கவனிக்க விரும்பவில்லை என்பதால் அவர் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக மட்டுமே இருப்பார் என்று கூறப்படுகிறது. குஜராத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அங்கே புதிய ஆளுநர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மாற்றம்
இது போக மற்ற 5 மாநிலங்களில் ஆளுநர் பதவிக்காலம் முடிய உள்ளது. இதன் காரணமாகவே இங்கு ஆளுநர்கள் மாற்றப்பட உள்ளனர். இந்த நிலையில்தான் இந்த புதிய ஆளுநர் பதவிக்கான போட்டி பாஜகவில் கடுமையாக நடந்து வருகிறதாம். பாஜக மூத்த தலைவர்கள் சிலர் ஆளுநர் பதவிக்கு அடிபோட்டு வருகிறார்களாம். அதேபோல் சில கூட்டணி கட்சி தலைவர்களும் ஆளுநர் பதவிக்கு அடிபோட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் 2 பாஜக தலைவர்களுக்கு இந்த திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுநர்
2 பாஜக தலைவர்கள், பாஜக கூட்டணியில் உள்ள ஒரு தலைவர் என்று 3 மூன்று பேர் தமிழ்நாட்டில் இருந்து பாஜக தலைவர் ஆவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆளுநர் பதவிக்கு அடிபோட்டு டெல்லிக்கு மாறி மாறி போன் செல்வதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு சீக்ரெட் வார் போல கட்சிக்குள் இந்த மோதல்கள் நடப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை ஆளுநர் ஆர். என் ரவி சந்தித்தார்.

ரஜினிகாந்த்
அப்போதே ரஜினிகாந்திற்கு ஆளுநர் பதவி கொடுக்கப்படலாம் என்று பேச்சுக்கள் எழுந்தன. தமிழ்நாட்டில் அவர் பிறந்தவர் இல்லை என்பதால் தமிழ்நாட்டு ஆளுநர் பதவியை அவர் பெற முடியும். இதனால் அவரின் பெயரும் இதில் அடிபட்டது. இந்த நிலையில்தான் 7 மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினிகாந்த் மீண்டும் சீனுக்குள் வந்துள்ளார். அவருக்கு இதில் ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி கிடைக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது.