அசத்தும் வந்தே பாரத்.. சாதாரண் வந்தே பாரத்தைவிடுங்க.. 7 வரப்போகுதாமே.. மகிழ்ச்சியில் தெற்கு ரயில்வே
சென்னை: சென்னை டூ நெல்லை வரை வந்தே பாரத் புதிதாக சேவை தொடங்கி உள்ள நிலையில், தெற்கு ரயில்வே ஒரு மகிழ்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில், Vande Bharat train, Tirunelveli Chennai vande bharat express, Nellai Chennai vande bharat, MDMK Vaiko, வந்தே பாரத், வந்தே பாரத் ரயில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், பிரதமர் மோடி, நெல்லை சென்னை வந்தே பாரத், மதிமுக வைகோ, கோவில்பட்டி,

வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் உள்ளதால், நாட்டு மக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில், என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்..
இந்த வந்தே பாரத் திட்டம் பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்கிறார்கள்.. அதனால்தான், ஒவ்வொரு வந்தே பாரத் ரயில் சேவையையும் நேரடியாகவே சென்று பிரதமர் துவக்கி வைத்து வருகிறார்.
வந்தே பாரத்: நம்முடைய தமிழ்நாட்டில்கூட, வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. சென்னை - மைசூரு & சென்னை - கோவை ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயங்குகின்றன. இதில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தென்மாவட்ட மக்கள்: இப்போது, சென்னையிலிருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயிலின் சேவையும் துவங்கி உள்ளது.. இதுபோக, ஆரஞ்சு நிற வந்தேபாரத் நெல்லை-சென்னை ரோட்டில் தான் இயங்கும் என்கிறார்கள். இதுபோக, குறைந்த கட்டணத்தில் 'சாதாரண் வந்தே பாரத்' வரப்போவதாகவும் சொல்கிறார்கள்.
இந்நிலையில், தெற்கு ரயில்வேக்கு அதிகபட்சமாக 7 வந்தே பாரத் ரயில்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் மகிழ்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் சொல்லும்போது, இப்போது 33 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், தெற்கு ரயில்வேக்கு அதிகபட்சமாக 7 ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
குட்நியூஸ்: இதில் ஒரு ரயில் ஸ்பேர் ரயில்.. மற்ற 6 ரயில்கள், சென்னை சென்ட்ரல் - மைசூர், சென்ட்ரல் - கோவை, எழும்பூர் திருநெல்வேலி உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, வடக்கு ரயில்வேக்கு 5, மத்திய ரயில்வேக்கு 4, மேற்கு ரயில்வே, வடக்கு மேற்கு ரயில்வேக்கு தலா 3 ரயில்களும், தெற்கு மத்திய ரயில்வே, தெற்கு கிழக்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வேக்கு தலா 2 ரயில்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ...
வருடம் வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாடு முழுதும், கிட்டத்தட்ட 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications