சென்னையில் பெட்டிக்கடையில் மாமூல் கேட்டு தகராறு: 7 ஆண்டு ஜெயில் தண்டனை கொடுத்த நீதிமன்றம்
சென்னை: பெட்டிக்கடை உரிமையாளரிடம் 5 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு தகராறு செய்த நபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் பாபு. இவரது கடைக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் யுவராஜ் ஆகிய 2 பேரும் வந்தனர். அப்போது அவர்கள் காவல்துறைக்கு அபராதம் செலுத்தி இருசக்கர வாகனத்தை மீட்க 5,000 ரூபாய் கேட்டுள்ளனர். மேலும் மாமூல் கொடுக்காவிட்டால் கொன்றுவிடுவோம் என கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

அப்படியும் பணம் தர மறுத்ததால், பாபுவை தாக்கியதுடன், கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்ததுடன், பணப்பெட்டியில் இருந்து 1,000 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, தங்களை யாராவது பிடிக்க முயன்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இது தொடர்பாக காயமடைந்த பாபு அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணையின் போது, தலையில் காயமடைந்த பாபு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கை சென்னை 5 - வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் விசாரித்தார். அரசு தரப்பில் பகவதிராஜ் ஆஜராகி, வாதங்களை முன்வைத்தார். அனைத்தை தரப்பு வாதங்களுக்கு பிறகு பாலாஜி மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் மீதான குற்றத்தை அரசு தரப்பில் நிரூபிக்கப்படாததால் அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications