Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நைட்டியுடன் ஆபாச நடனம்.. வட்டமாக நின்ற 7 யூடியூபர்ஸ்.. அரசு பொருட்காட்சியில் அசிங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரீல்ஸ் மோகத்தில் பல இளைஞர்கள் சிக்கி தங்களை தாங்களே அழித்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.. சிலசமயம் இந்த ரீல்ஸ் மோகம், அவர்களின் உயிரையே பறித்துவிடுகின்றன.. எனினும், ரீல்ஸ் வீடியோ மீதான ஆர்வம் குறையவில்லை.. ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு காசு பார்ப்பதற்கும் ஒரு கூட்டம் இருக்கவே செய்கிறது.. இப்படிப்பட்ட சூழலில் கன்னியாகுமரியில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை களியக்காவிளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கமாகும்.. 1926 முதல் இப்படியான பொருட்காட்சி நடந்து வருகிறது.. அரசு விழாவாக வாவுபலி பொருட்காட்சி தாமிரபரணி ஆற்றுக்கரையில் 20 நாட்களுக்கு நடத்தப்படும்.

nighties government exhibition youtubers

இந்த பொருட்காட்சியில் பல்வேறு வகையான சவாரிகள், விளையாட்டுகள், பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெறும்.. அதேபோல மினி ஓட்டல்கள் உள்ளிட்ட கடைகளும் அமைக்கப்பட்டிருக்கும்.. எனவே, இந்த பொருட்காட்சிக்கு அங்குள்ள மக்களிடம் பெருத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.. பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படுவதால், குடும்பத்துடன் பிள்ளை குட்டிகளை அழைத்து வருவார்கள்.

7 நைட்டி பாய்ஸ்

அந்த வகையில் இந்த வருடத்துக்கான வாவுபலி பொருட்காட்சி, குழித்துறை நகராட்சி சார்பில் கடந்த 9ம் தேதி ஆரம்பமானது.. மக்களை கவரக்கூடிய அனைத்து அம்சங்களும் இந்த பொருட்காட்சியிலும் இடம் பெற்றுள்ளது.. எனவே, குடும்பம் குடும்பமாக மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், திடீரென 7 இளைஞர்கள் நைட்டியுடன் அங்கே வந்துவிட்டார்கள்.. பொருட்காட்சிக்குள் நுழைந்து, வரம்பு மீறியும், ஆபாசமான செயல்களிலும் ஈடுபட்டதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. மேலும், அவர்களுக்கு தொந்தரவு செய்யும்விதமாக கத்தி கூச்சலிட்டதுடன், திடீரென 7 பேரும் ஆபாசமாக டான்ஸ் ஆட துவங்கிவிட்டனர்..

வட்டமாக டான்ஸ்

நைட்டியை அணிந்து கொண்டே, பொருட்காட்சி முழுவதும் சுற்றி வந்து கும்மாளமிட்டு கொண்டிருந்தனர்.. சினிமா பாடலுக்கு குதாட்டம் போடுவதாக சொல்லி, எல்லைமீறின ஆபாசத்தில் இறங்கிவிட்டனர்.. பிறகு ரெயில் பெட்டியை போல, 7 பேரும் ஒன்றாக சேர்ந்து வட்டமிட்டு டான்ஸ் ஆடினார்கள்..

ஒருகட்டத்தில், நைட்டியை தூக்கியபடி மாடல் அழகி நிகழ்ச்சி போலவும் நடந்து காட்டி அட்டூழியம் செய்தனர்.. இதனால் பெண் பிள்ளைகளையும், குழந்தைகளையும் பொருட்காட்சிக்கு அழைத்து வந்த பெற்றோர் வெலவெலத்து நின்றனர்.

பொதுமக்கள் கடும் கண்டனம்

நைட்டி அணிந்து அட்ராசிட்டி செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொருட்காட்சிக்கு வந்திருந்தவர்கள் ஆவேசத்துடன் கண்டனங்களை பதிவு செய்தனர்..

இத்தனை வருட காலமும் அமைதியாக நடந்து வந்த வாவுபலி பொருட்காட்சியில், இப்போது நடக்கும் இந்த ஆபாச செயலை அனுமதிக்க முடியாது என்றும், முடியும் இந்த பொருட்காட்சி முடியும்வரையாவது, இதுபோன்றவர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது என்றும் பெண்கள் கொந்தளித்து சொன்னார்கள்.

வழக்கு பதிவு

முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்ட நைட்டி பாய்ஸ் வீடியோ சோஷியல் மீடியாவிலும் வைரலானது.

இதைப்பார்த்து பொதுமக்களும் சம்பந்தப்பட்ட நைட்டி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமெண்ட்களை பதிவு செய்தார்கள்.

இந்நிலையில், நைட்டி பாய்ஸ் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. அபிஷேக், சுஜித், மார்ஷல் மற்றும் ஷாஜி உட்பட 7 பேர் மீது களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. நைட்டி அணிந்து ஆபாச நடனம் ஆடியது யூடியூபர்கள் என்பது தெரியவந்துள்ளது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+