உதயநிதி தொகுதியில் 89,241 வாக்காளர்கள் நீக்கம்.. மீண்டும் சிறியதாகும் சேப்பாக்கம் - திருவல்லிகேணி?
சென்னை: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொந்த தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் மொத்தம் 89,241 வாக்காளர்களின் பெயர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதனால் மீண்டும் சென்னையின் சிறிய தொகுதியாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மாறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் ‛சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கை கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கியது. இந்த பணிகள் இந்த மாதம் 4ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தேதி நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்படி ‛சார்' விண்ணப்ப படிவங்களை பூர்த்தியிட்டு டிசம்பர் 14ம் தேதி வரை வழங்க காலஅவகாசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து இன்று மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக உள்ள சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் மொத்தம் 89,241 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு முன்பாக தொகுதியில் மொத்தம் 2,21,099 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையின் வாயிலாக மொத்தம் 89,241 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயித்து 846 ஆக சரிந்துள்ளது.
இதில் ஆண் வாக்காளர்களின் ணெ்ணிக்கை 73,260 ஆகவும், பெண் வாக்காளர்களின்எண்ணிக்கை 77,543 ஆகவும், மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 43 ஆகவும் உள்ளது. இதன்மூலம் சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் 6 வது சிறிய சட்டசபை தொகுதியாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மாறி உள்ளது.
2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது சேப்பாக்கம் சிறிய தொகுதியாக இருப்பதாக கூறி திருவல்லிக்கேணி ஒன்றாக இணைக்கப்பட்டது. அதன்பிறகு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி என்று அழைக்கப்பட்டு வருகிறது. மேலும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, சென்னையில் பெரிய தொகுதியாக மாறியது.
கடந்த 2011, 2016, 2021 என 3 சட்டசபை தேர்தல்களிலும் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது. முதல் 2 சட்டசபை தொகுதிகளின் திமுகவின் ஜெ அன்பழகன் வென்ற நிலையில் கடந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் தற்போது மீண்டும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 89,241 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வாக்காளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 846 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications