தமிழ்நாட்டில் மேம்படுத்தப்படும் 77 ரயில் நிலையங்கள் இவைதான்... மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் அமிர்த நிலையங்களாக மேம்படுத்தப்பட உள்ளன என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டுக்கு 2014-ம் ஆண்டை விட 7.5 மடங்கு அதிகமாக நடப்பு பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

2025-26-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.879 கோடியை விட 7.5 மடங்கு அதிகமாகும்.

budget 2025 tamilnadu railway projects 2025

இலங்கை கட்டமைப்புக்கு இணையாக



2014-ம் ஆண்டிலிருந்து 2025-ம் ஆண்டு வரை 1303 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது இலங்கையில் உள்ள முழு ரயில் கட்டமைப்புத் தூரத்தை ஏறத்தாழ நெருங்கியுள்ளது. 2014-ம் ஆண்டு முதல் 2,242 கிலோ மீட்டர் தூர ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 94 சதவீதம் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.


22 திட்டங்களுக்கான பணிகள்



ரூ.33,467 கோடி செலவில் 2,587 கிலோ மீட்டருக்கான 22 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.2948 கோடி மதிப்பில் 77 ரயில் நிலையங்கள் அமிர்த ரயில் நிலையங்களாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.


கவச் அமைப்பு

கவச் அமைப்பை 1460 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 601 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.



ரயில்வே மேம்பாலங்கள்

715 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் 2014-ம் ஆண்டு முதல் கட்டப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு முதல் பயணிகளுக்கான மின்தூக்கிகள் 98-ம், நகரும் படிக்கட்டுகள் 53-ம் அமைக்கப்பட்டுள்ளன. 415 ரயில் நிலையங்களில் வைஃபை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

வந்தே பாரத் ரயில்கள்



19 மாவட்டங்களை உள்ளடக்கி 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் இந்த ரயில்கள் 20 நிலையங்களில் நின்று செல்கிறது. மால்டா நகரிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் ஒரு அமிர்த பாரத் விரைவு ரயில் தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தின் வழியே செல்கிறது. இரண்டு இடங்களில் அந்த ரயில் நின்று செல்கிறது.

அமிர்த நிலையங்களாக மாறும் ரயில் நிலையங்கள் பட்டியல்

அம்பாசமுத்திரம், அம்பத்தூர், அரக்கோணம், அரியலூர், ஆவடி, பொம்மிடி, செங்கல்பட்டு, சென்னை கடற்கரை, சென்னை எழும்பூர், சென்னை பூங்கா, சிதம்பரம், சின்னசேலம், குரோம்பேட்டை, கோயம்புத்தூர் சந்திப்பு, கோயம்புத்தூர் வடக்கு, குன்னூர், தருமபுரி, திண்டுக்கல், டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல், ஈரோடு சந்திப்பு, கூடுவாஞ்சேரி, கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஓசூர், ஜோலார்பேட்டை சந்திப்பு, கன்னியாகுமரி முனையம், லால்குடி, மதுரை சந்திப்பு, மாம்பலம், மணப்பாறை, மன்னார்குடி, மயிலாடுதுறை சந்திப்பு, மேட்டுப்பாளையம், மொரப்பூர், நாகர்கோவில் சந்திப்பு, நாமக்கல், பழனி, பரமக்குடி, பெரம்பூர், போத்தனூர் சந்திப்பு, பொள்ளாச்சி சந்திப்பு, போளூர், புதுக்கோட்டை, ராஜபாளையம், ராமநாதபுரம், ராமேஸ்வரம், சேலம், சாமல்பட்டி, சோழவந்தான், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், பரங்கிமலை, தாம்பரம், தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர் சந்திப்பு, திருச்செந்தூர், திருநெல்வேலி சந்திப்பு, திருப்பாதிரிப்புலியூர், திருப்பத்தூர், திருப்பூர், திரிசூலம், திருத்தணி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, உதகமண்டலம், வேலூர் கண்டோன்மென்ட், விழுப்புரம் சந்திப்பு, விருதுநகர், விருத்தாசலம் சந்திப்பு ஆகிய 77 ரயில் நிலையங்கள் அமிர்த நிலையங்களாக மேம்படுத்தப்படும்.

ரயில் நிலையங்கள் மறுமேம்பாட்டு திட்டங்களின் முன்னேற்றம்

ரூ113 கோடி- ராமேஸ்வரம்

பார்சல் அலுவலகம் முடிவடைந்துள்ளது. பல்லியக்க வளாகம் மறுசீரமைக்கப்பட்டு ஓய்வறைகளாக மாற்றப்பட்டுள்ளது. குடியிருப்பு அடுக்குமாடி கட்டிடம், துணை நிலையம், வடக்கு முனைய கட்டிடம், புறப்படும் இடம், அலுவலர் தங்குமிட கட்டிட பணிகள் நிறைவடைந்துள்ளன. இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. கிழக்கு முனையம் மற்றும் வந்து சேருமிடம் அமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடைமேடை மேம்படுத்துதல், கழிவு சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கடல் நீரை நன்னீராக்கும் நிலையம் ஆகியவற்றின் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ. 413 கோடி- மதுரை

ரயில்வே பாதுகாப்புப் படையின் உணவகம் மற்றும் துணை நிலைய அமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பொதுத்தளத்திற்கு செல்ல மின்தூக்கிக்கான அடித்தளப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிழக்கு முனைய கட்டிடப் பணிகளும் நடந்து வருகின்றன. கிழக்கு குறைந்த அளவு சுமை மாற்றும் இடம், மேற்கு பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் மற்றும் கிழக்கு பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் (கட்டம்-1) அமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. பார்சல் நடைமேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை எழும்பூர்- ரூ842 கோடி

துருபிடிக்காத இரும்பு பயன்படுத்தப்பட்ட பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் மற்றும் பயணியர் தங்குமிடத்துடன் கூடிய பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றின் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணியர் தங்குமிட பக்கவாட்டு பார்சல் கட்டிட அமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கட்டுமானம் மற்றும் பூச்சு வேலைகள் நடந்து வருகின்றன. மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் பக்கவாட்டு சுவர் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

கன்னியாகுமரி ரூ 67 கோடி

துணை நிலையக் கட்டிடம் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை கட்டிட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய முனைய கட்டிட பயன்பாட்டிற்கான அடையாள பணி தொடங்கி உள்ளது. அலுவலர் ஓய்வு அறைக்கான அடித்தளப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காட்பாடி ரூ. 461 கோடி

புறப்பாட்டு முனைய கட்டிடம் அடித்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிட பம்ப் அறை மற்றும் நிலத்தின் கீழ் தண்ணீர் தேங்கும் தொட்டிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாரணர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை கட்டிட கட்டுமானப் பணிகள் நிடைவடைந்துள்ளன. எஞ்சியப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அலுவலர் குடியிருப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டங்களுக்கான மொத்தச் செலவு ரூ. 1896 கோடி. இவ்வாறு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+