தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 14,753 ஆக அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகள், பிற மாநிலங்களில் இருந்து வந்த 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இன்று நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் மொத்தம் 694 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 92 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

சென்னையில் மட்டும் 569 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் இன்று தமிழகத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்திருக்கிறது.
கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரில் 846 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 7,128 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிலவரம்
மாவட்டங்களில் கொரோனா நிலவரம்: செங்கல்பட்டு- 40; ஈரோடு- 1; கள்ளக்குறிச்சி- 1 ; காஞ்சிபுரம் -13; கிருஷ்ணகிரி- 1; மதுரை- 1; புதுக்கோட்டை- 2; ராமநாதபுரம் -7 ; ராணிப்பேட்டை- 1 ; தேனி- 4; திருவள்ளூர்- 39; திருவண்ணாமலை-2; தூத்துக்குடி-6; திருநெல்வேலி- 1; திருச்சி -4; வேலூர்-2;
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications