8 நகரங்களில் வருகிறது.. புது பேருந்து நிலையங்கள்! ஒரே நாளில் ஜாக்பாட் அறிவிப்பு! எங்கெல்லாம் வருது?
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாகம் தொடர்பான மானியக்கோரிக்கை அறிவிப்புகள் வெளியாகின. பல புதிய பேருந்து நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மேம்பாடு, புதிய சந்தைகள், புதிய நவீன இறைச்சிக்கூடங்கள், புதிய நவீன எரிவாயு தகன மேடைகள், புதிய பாதாள சாக்கடை வசதி தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
புதிய நவீன எரிவாயு தகன மேடைகள்:
கடலூர், ஓசூர், தூத்துக்குடி, தாம்பரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், உதகை, மறைமலைநகர், பெரம்பலூர், அரியலூர், திருவத்திபுரம்
புதிய பாதாள சாக்கடை வசதி:
தென்காசி, இராணிப்பேட்டை
புதிய பேருந்து நிலையங்கள்:
கும்பகோணம், அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர்

பேருந்து நிலையங்கள் மேம்பாடு:
கடலூர், தஞ்சாவூர், ஆரணி, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், காரமடை, கிருஷ்ணகிரி, குடியாத்தம், கொமாரபாளையம், கோவில்பட்டி, திருவாரூர், துறையூர், தேனி, அல்லிநகரம், பட்டுக்கோட்டை, பல்லடம், பொன்னேரி, முசிறி, விருதுநகர்
புதிய சந்தைகள்:
தூத்துக்குடி, புதுக்கோட்டை, ஆத்தூர், திருத்துறைப்பூண்டி, தேவகோட்டை, புஞ்சைப் புளியம்பட்டி, பெரியகுளம், திருவாரூர்
சந்தைகள் புதுப்பித்தல்:
திருச்சி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், முசிறி, மேட்டூர், கோபி, வாலாஜாப்பேட்டை
வால்பாறையில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் மற்றும் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும்.
புதிய நவீன இறைச்சிக்கூடங்கள்:
கடலூர், இராமநாதபுரம், காயல்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவத்திபுரம், பரமக்குடி, விழுப்புரம்
புதிய பேருந்து நிலையம்
கும்பகோணம் பேருந்து நிலையம் பல மாத கோரிக்கையாக இருந்த நிலையில் அது நிறைவேற்றப்படுகிறது. அருகிலேயே மன்னார்குடி பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. அதேபோல் விரைவில் மகாபலிபுரம் பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளது. மகாபலிபுரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானம் கிட்டத்தட்ட 60% நிறைவு பெற்றுள்ளது. இந்த வருட இறுதியில் இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாபலிபுரத்தில் பல்லவ கட்டுமான கலையை பிரதிபலிக்கும் விதமாக, தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காக பிரம்மாண்ட பேருந்து நிலையம் வர உள்ளது.
மகாபலிபுரத்தில் ஏன் பேருந்து நிலையம்
தென் தமிழ்நாட்டிற்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களின் வசதிக்காகவே கோயம்பேடு பேருந்து நிலையம் (ஈசிஆர் வழி செல்லும் பேருந்துகள் மட்டும்), கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், தாம்பரம் புறநகர் பேருந்து நிலையங்கள் உள்ளன. ஆனாலும் கோயம்பேடு பேருந்து நிலையம் இடிக்கப்பட உள்ளதால் கோயம்பேடு பேருந்து நிலையம் மூடப்படும்.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஈசிஆரில் இன்னொரு பேருந்து நிலையத்தை பிரம்மாண்டமாக கட்ட முடிவு செய்துள்ளனர். மாமல்லபுரம் நகருக்கு வெளியே ECR இல் அமைய உள்ள இந்த புதிய பேருந்து முனையத்தை நிர்மாணிப்பதற்கான டெண்டரை CMDA வெளியிட்டு, ஒப்பந்ததாரரை இறுதி செய்துள்ளது.
சிஎம்டிஏ அமைச்சர் பி.கே சேகர் பாபு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டினருக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் முக்கிய இடமாக இருந்தாலும், மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதை மாற்ற முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். ஆகஸ்ட் மாதம் புதிய பேருந்து நிலையத்தின் இடத்தைப் பார்வையிட்ட சேகர்பாபு, பயணிகளுக்கு எளிமையான பயண அனுபவத்தை அளிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையத்தை கட்டுவோம் என்று கூறியுள்ளார்.
எவ்வளவு பெரியது
அதன்படி 6.79 ஏக்கரில் 27,500 சதுர மீட்டர் பரப்பளவில் மொத்தம் ₹67 கோடி செலவில் புதிய பஸ் டெர்மினஸ் திட்டம் தொடங்கப்படும் என சிஎம்டிஏ தரப்பு தெரிவித்துள்ளது. இரண்டு மாடி கொண்ட பேருந்து முனையத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் பார்க்கிங், தரைத்தள கடைகள், டிக்கெட் கவுன்டர்கள் மற்றும் காத்திருப்பு அறைகள் மற்றும் முதல் தளத்தில் அலுவலக அறைகள், தங்குமிடங்கள், பணியாளர்கள் ஓய்வு அறை மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications