Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளி கொண்டாட்டம்.. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் 8 லட்சம் பேர் பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து அரசுப் பேருந்துகளில் 8 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 15,429 அரசுப் பேருந்துகளில் 7,94,990 பேர் பயணம் செய்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளியையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். சனிக்கிழமை முதல் 4 நாட்கள் விடுமுறை என்பதால் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு ரயில்கள், பேருந்துகள், தனியார் வாகனங்களில் சென்றுள்ளனர். அரசு போக்குவரத்துத்துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

Diwali 2025 Deepavali TNSTC Special Bus

தீபாவளியையொட்டி 4 நாள்களாக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் பிறபகுதிகளில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, வியாழக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து வழக்கமான பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களை இணைக்கும் வகையில் மாநகர சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 4 நாள்களாக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து அரசுப் பேருந்துகளில் பயணிக்க 3.59 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு 1.68 லட்சம் பயணிகள் அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்த நிலையில், இந்த ஆஅண்டு 3 நாட்களில் 3.59 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்திருப்பது அரசுப் பேருந்துகள் மீது, மக்கள் நம்பிக்கை கொண்டிருப்பதைக் காட்டுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

பண்டிகை பயணத்துக்கு, தனியார் ஆம்னி பேருந்துகளை நாடுபவர்கள் கூட தற்பொழுது அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு பண்டிகைக்கும் போக்குவரத்து துறை, முன்கூட்டியே திட்டமிட்டு பேருந்துகளை இயக்கி வருகிறோம். இதனால் எந்தவித பிரச்சனையும் இன்றி மக்கள் பயணம் செய்கின்றனர் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+