சபாரி சூட்.. கையில் எக்ஸ் 95.. முதல்வர் ஸ்டாலினை பாதுகாக்கும் 9 "பவர் புல்" பெண்கள்.. யார் இவர்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலினின் தனி பாதுகாப்பு படை பிரிவில் 9 பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். முதல்வரின் தினசரி பாதுகாப்பை உறுதி செய்யும் அதிகாரிகளில் இவர்கள் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் தற்போது பல்வேறு துறைகளில் கலக்கி வருகிறார்கள். விண்வெளி துறை தொடங்கி விளையாட்டு துறை வரை பல இடங்களில் பெண்கள் கோலோச்ச தொடங்கி உள்ளனர்.

இந்தியாவில் இன்னும் பெண்கள் முழுமையாக " வீட்டு காவலில்" இருந்து விடுபடவில்லை என்றாலும் கூட.. பல துறைகளில் தற்போது பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடைய தொடங்கி உள்ளனர். தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு படை பிரிவில் கூட பெண்கள் உள்ளனர்.

முதல்வர் பாதுகாப்பு

முதல்வர் பாதுகாப்பு

தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு முதல்வர் என்ற அடிப்படையில் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. Z+ பாதுகாப்பில் 10+ கமாண்டோக்கள் பணிகள் இருப்பார்கள். மொத்தமாக 15 அதிகாரிகள் உடன் இருப்பார்கள். 5+க்கும் அதிகமான குண்டு துளைக்காத வாகனங்கள் பயன்படுத்தப்படும். இது போக தனி பாதுகாப்பு அதிகாரிகள் எனப்படும் Personal Security Officers (PSO) அதிகாரிகள் இருப்பார்கள். இவர்களின் எண்ணிக்கை ரகசியமாக இருக்கும். முதல்வர்களுக்கு இது போக மாநில உள்துறை சார்பாக தனி பாதுகாப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு இருப்பார்கள். இந்த Personal Security Officers (PSO) அதிகாரிகள்தான் முதல்வருக்கு அருகே சபாரி அணிந்து உடன் இருப்பார்கள்.

பயிற்சி

பயிற்சி

இந்த பிஎஸ்ஓ அதிகாரிகளுக்கு மிக தீவிரமாக கடினமான பயிற்சிகள் வழங்கப்படும். இவர்களை தேர்வு செய்வதே மிக கடினமான முறைகள் மூலம் செய்யப்படும். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினின் பிஎஸ்ஓ அதிகாரிகள் குழுவில் அதாவது கோர் பாதுகாப்பு குழுவில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளில் 9 பேர் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 9 பெண்கள் முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்பை உறுதி செய்யும் குழுவில் உள்ளனர். எஸ்.ஐ ரேங்க் மற்றும் தலைமை கான்ஸ்டபிள் ரேங்க் கொண்ட அதிகாரிகள் சிறப்பு தேர்வு மற்றும் சிறப்பு பயிற்சி பெற்று இந்த குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பின்னணி

பின்னணி

எக்ஸ் 95 வகை துப்பாக்கி, ஏகே 47 மற்றும் பாதுகாப்பு உடை, அதற்கு மேல் சபாரி சூட் என்று சினிமாவில் காட்டுவது போல கெத்தாக வலம் வருகிறார்கள். தினமும் காலையில் முதல்வரின் பணிகள் தொடங்கும் நிமிடத்தில் இருந்து இரவு அவர் உறங்க செல்லும் வரை இவர்கள்தான் உடன் இருப்பார்கள். முதல்வர் எங்கே சென்றாலும் அங்கே செல்வது. அவருக்கு முன்பாக சிலர் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பை உறுதி செய்வது. முதல்வர் செல்லும் வழியில் பாதுகாப்பை உறுதி செய்வது. கூட்டத்தை கட்டுப்படுத்துவது, சந்தேகமான ஆட்களை முன்பே பிடிப்பது, முதல்வரை சுற்றி 360 டிகிரியில் என்ன நடக்கிறது என்று பார்ப்பது என்று அனைத்து பணிகளையும் இந்த 9 பெண் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

பெண்கள்

பெண்கள்

முதல்வர் ஒருவரின் பாதுகாப்பு டீமில் இத்தனை பெண்கள் இருப்பது இதுவே முதல்முறை ஆகும். முதல்வர் ஸ்டாலின் சார்பாக கடந்த மார்ச் மாதம் இந்த பெண்கள் பாதுகாப்பு குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். போலீசில் பல்வேறு பிரிவில் இருந்த இவர்கள், தேர்வு எழுதி, கடும் பயிற்சிக்கு பின் முதல்வரின் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் துல்லியமாக துப்பாக்கியால் சுடும் திறன் கொண்டவர்கள், வேகமாக ஓடும் திறன் கொண்டவர்கள். அதேபோல் எந்த நேரத்திலும் டென்சன் ஆகாத எமோஷனல் இன்டலிஜென்ஸ் பயிற்சி பெற்றவர்கள்.

யார் இவர்?

யார் இவர்?

அதேபோல் கையில் துப்பாக்கி இல்லாமலே 5 பேருக்கும் மேட்பட்டவர்களுடன் சண்டை போடும் திறன் கொண்டவர்கள். தற்காப்பு கலை பயிற்சியும் பெற்றுள்ளனர். தினமும் முதல்வருக்கு பாதுகாப்பு கொடுக்கும் முன் காலையில் தீவிர பயிற்சி எடுத்துவிட்டுதான் பணியை தொடங்குவார்கள். பாதுகாப்பு மட்டுமின்றி பொது அரசியல் அறிவு, நிதி தொடர்பான அறிவு, குண்டுகளை கையாள்வது, ஐடி தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் இவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளன. முதல்வர் ஒருவரின் பாதுகாப்பு டீமில் பொதுவாக ஆண்கள் அதிகமாக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் பெண் அதிகாரிங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+