தமிழகத்தில் ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா... தொடரும் அதிகரிப்பு... மக்களே உஷார்.. மாஸ்க் போடுங்க!
சென்னை: தமிழகத்தில் கொரோனா மீண்டும் ஆயிரம் எண்ணிக்கையை நெருங்குகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

கொரோனாவில் இருந்து மேலும் 569 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,44,568 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் ஓரளவு அடங்கி இருந்த கொரோனா தற்போது மீண்டும் ஆட்டம் போட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு 500-க்கு கீழ் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,000-ஐ தொடும் விளிம்பு நிலையில் உள்ளது. சென்னையிலும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று வேளச்சேரி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மேலும் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,63,363 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 569 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,44,568 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவுக்கு மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 12,573 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 72,025 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,85,57,485 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 71,835 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,82,38,297 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 6,222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 86 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் 77 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
