பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு.. கர்நாடகா அரசு மருத்துவமனையில் விநோதம்.. வியந்து நின்ற டாக்டர்கள்
சென்னை: உலகில் எத்தனையோ அதிசயங்கள் நிமிடத்துக்கு நிமிடம் நடந்து வருகின்றன.. இந்த அதிசயங்கள் உலக மக்களை வியக்க வைத்தும் வருகின்றன.. இயற்கைக்கு அப்பாற்பட்டு இதுபோன்ற அதிசய சம்பவங்கள் நடப்பதாக பெரும்பாலானோர் நம்புகிறார்கள்.. இந்நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்திலும் ஒரு வியப்பூட்டும் சம்பவம் நடந்துள்ளது.. இதுகுறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? கர்நாடகா மருத்துவமனையில் என்ன நடந்தது? என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் ஒரு விநோத நிகழ்வு நடந்தது.. லூசி என்ற 32 வயது பெண், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில்ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.. இவரது கணவர் ஐசக் கடந்த 2022ல் கிட்னி ஆபரேஷன் செய்திருந்ததால் கருத்தரிப்பதில் சிக்கல் இருந்தது.. எனினும், லூசி கர்ப்பமானார்.

ஒரே குழந்தை 2 முறை பிறந்த அதிசயம்
லூசிக்கு கர்ப்பத்தின் 12வது வாரத்தில், வழக்கமான அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்தபோது கேன்சர் இருப்பது தெரியவந்தது.. குழந்தையை பெற்றெடுக்கும் வரை சிகிச்சையை தாமதப்படுத்தினால், புற்றுநோய் பரவி லூசிக்கும், குழந்தையின் உயிருக்கும் ஆபத்து என்று டாக்டர்கள் நினைத்தனர்.. எனவே, உடனடியாக சிகிச்சை அளிக்க டாக்டர்கள் தயாரானார்கள்.
இதற்காக சிக்கலான, ஆபத்தான ஒரு ஆபரேஷனை செய்வதென்று முடிவு செய்து, 15 பேர் டாக்டர்கள் குழு ஆபரேஷனை நடத்தினர். அதன்படி, குழந்தையை வெளியே எடுத்ததுடன், கேன்சர் கட்டிகளையும் டாக்டர்கள் அகற்றினார்கள்.. இந்த ஆபரேஷன் நடந்து முடியும்வரை, கருப்பையில் இருந்த குழந்தை 2 மணி நேரம் வெளியே இருந்தது.. 2 மணி நேரமும் அந்த குழந்தைக்கு ரத்த ஓட்டம் தடைபடாமல் டாக்டர்கள் கவனமாக பார்த்துக் கொண்டனர்.
இதற்கு பிறகு நிஜமாகவே லூசிக்கு குழந்தை பிறந்தது.. அதாவது ஒரு பெண்ணுக்கு 2 முறை குழந்தை பிறந்த இந்த சம்பவம் பெரும் வியப்பை அனைவருக்கும் ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
அரசு மருத்துவமனை ஆச்சரியம்
இப்போது, கர்நாடக மாநிலத்தில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.. தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் கிம்ஸ் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகாவை சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய 2வது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு செப்டம்பர் 23 ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தையின் உடலில் சில மாற்றங்கள் தென்பட்டன.. குழந்தையின் வயிறு சற்று பெரியதாக இருந்தது. இதனால் 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' செய்யப்பட்டது. அப்போது குழந்தையின் வயிற்றில், முதுகெலும்பு உள்ளே ஒரு கரு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது..
கருவுக்குள் கரு
ஆண் குழந்தையின் வயிற்றில் கரு வளர்வது தெரிந்து டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.. எனினும் அதனை தெளிவாக தெரிந்து கொள்ள, உடனடியாக அந்த குழந்தையின் வயிற்றை MRI ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.. ஆனால், அதன் ரிப்போர்ட் இன்னும் வரவில்லை.
இதுகுறித்து கிம்ஸ் மருத்துவமனை மருத்துவ அதிகாரி ஈஸ்வர் ஹசாபி சொல்லும்போது, "இதனை மருத்துவ உலகில் 'கருவுக்குள் கரு' என்று சொல்வார்கள்.. பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு வளர்வது தெரியவந்துள்ளது. முதுகெலும்புடன் கூடிய கரு இருக்கிறது.
உலகின் அரிய நிகழ்வு
இது பச்சிளம் குழந்தையின் உடலுக்குள் இயல்பற்ற வளர்ச்சியாகும்.. உலகம் முழுதும் சில குழந்தைகளுக்கு மட்டும் இப்படி நடக்கும்.
குழந்தை பிறப்பதற்கு முன்பே, இந்த விஷயத்தை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. இத்தகைய குழந்தைக்கும், ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. MRI ஸ்கேன் ரிப்போர்ட் வந்ததுமே, அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கப்படும். ஆனாலும், ஆண் குழந்தையின் வயிற்றில் கரு என்பது ஒரு அரிய நிகழ்வுதான்.. தற்போது குழந்தையின் தாய் ஆரோக்கியமாக இருக்கிறார்" என்றார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications