இதெல்லாம் சரியில்லீங்க... அதிமுக வழிகாட்டுதல் குழுவில் ஜாதி நீதியும் இல்லை.. சமூக நீதியும் காணோமே!!
சென்னை: அதிமுக உருவாக்கியுள்ள வழிகாட்டுதல் குழுவில் ஜாதிய நியாயமும் இல்லை... சமூக நீதியும் காணலை என்கிற புலம்பல்கள் எழத் தொடங்கி உள்ளன.
அதிமுகவில் முடிவுகளை எடுக்க 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 11 பேர் குழுவில் ஓபிஎஸ் அணியின் பேரும் ஈபிஎஸ் அணியின் 6 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
அத்துடன் இங்கே பிரச்சனை முடியவில்லை. ஜாதிய அடிப்படையில்தான் இந்த குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால் எங்களுக்கு எல்லாம் இடம் கிடையாதா? என்கிற பொங்கல் சப்தங்கள் ஓவராக கேட்கிறது.

எந்த ஜாதி? யார் பிரதிநிதி?
11 பேர் கொண்ட குழுவில் முக்குலத்தோர் பிரதிநிதிகளாக திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் உள்ளனர். கொங்கு வேளாள கவுண்டர்கள் சார்பாக தங்கமணி, வேலுமணிக்கு இடம். வன்னியர் பிரதிநிதியாக சிவி சண்முகம், மீனவர் சமூகத்துக்கு ஜெயக்குமார்... நாயுடு (கிறிஸ்தவ) சமூகத்துக்கு பிரபாகரன், நாடார் சமூகத்துக்கு மனோஜ் பாண்டியன், தேவேந்திர குலவேளாளர் சார்பாக சோழவந்தான் மாணிக்கம் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

தலித்துகளுக்கு இடம் இல்லை?
அதெல்லாம் சரிங்க.. தலித்துகளுக்கான பிரதிநிதி யார்? என்கிற ஒரு கேள்வி எழுந்துள்ளது. அப்படியானால் அதிமுக என்ன ஆதிக்கசாதிகளின் கட்சியா? என்கிற குமுறலும் கொட்டப்படுகிறது. இதன் உச்சமாக ஏங்க பெண்கள் ஒருவரை கூட நியமிக்கலையே என்கிற ஆதங்கமும் வெளிப்படுகிறது.

ஜெ. கட்சியில் பெண்களுக்கு இடம் இல்லையா?
இத்தனைக்கும் எம்ஜிஆருக்குப் பிறகு இந்த கட்சியை கட்டி காப்பாத்தி சிந்தாம சிதறாம ஒப்படைச்சவரு ஜெயலலிதா.. அவரோட கட்சியில் ஒரே ஒரு பெண்ணுக்கு கூடவா வழிகாட்டுதல் குழுவில் இடம்கிடைக்க தகுதி இல்லாம போச்சா? அதேபோல் இஸ்லாமியருக்கான பிரதிநிதித்துவம் இல்லையே ஏன்? என்றும் கேட்கப்படுகிறது.

மாற்றி அமைக்க கோரிக்கை
ஏன் 11 பேர் கொண்ட குழுவைத்தான் அமைக்கனுமா? எல்லா ஜாதியினர், சமூகத்தினர் இடம்பெறும் வகையிலான குழுவை அமைத்தால் பஞ்சாயத்தை கூட்டி ஊரைவிட்டு ஒதுக்கியா வெச்சிடுவாங்க? என்னங்க இதெல்லாம் சரியில்லீங்க.. என ஏகத்துக்கும் ஒவ்வொரு சமூகமும் கோபக்கனலை கொட்டி வருகிறது. இதை எப்படி சமாளிப்பாங்களோ?
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications