அ ராசா விவகாரம்.. நடத்தை விதிகளுக்கு எதிரானது.. தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பிய சத்தியபிரதா சாகு
சென்னை: தனி நபர் விமர்சனம் என்பது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் அ. ராசா விமர்சனம் தொடர்பான அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளதாகத் தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
Recommended Video

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது,
ஒரு பக்கம் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. மறுபுறம் தேர்தலைப் பாதுகாப்பாக நடத்தத் தேவையான பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

1,55,102 வாக்குப்பதிவு இயந்திரங்கள்
இந்நிலையில், தேர்தல் பணிகள் குறித்து விளக்கும் வகையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக 1,55,102 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 1,14,205 கண்ட்ரோல் யூனிட், 1,20,807 விவி பேட் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

தபால் வாக்கு
80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுதிறனாளிகளிடம் வீடு வீடாகச் சென்று தபால் வாக்குகள் பெறும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மையங்கள் அல்லது தபால் அலுவலகங்களில் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். அரசு அலுவலர்களுக்கு இதுவரை 1,85,057 பேருக்கு 12டி படிவம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 89,185 படிவங்கள் திரும்பக் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இன்னும் 1,55,667 படிவங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சேலத்தில் 40 கோடி சென்னையில் 18 கோடி
தமிழகத்தில் 537 மிகவும் பதற்றமானவை வாக்குச்சாவடிகள், 10,813 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 319.02 கோடி மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி, மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறையினால், 60.58 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாகச் சேலத்தில் 40.47 கோடியும், சென்னையில் 18.75 கோடியும், திருப்பூரில் 13.35 கோடியும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் புகார்
மேலும், சிவிஜில் மூலம் இதுவரை 3464 புகார்கள் வந்துள்ளன. இதில், 2580 புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாகக் கரூரில் 671 புகார்களும், கோவையில் 593 புகார்களும், திருப்பூரில் 244 புகார்களும், கன்னியாகுமரியில் 238 புகார்களும், சென்னையில் 193 புகார்களும் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். புகார்கள் அதிகமாக வரக்கூடிய தொகுதிகளில் தேர்தலை நிறுத்துவதா, இல்லை அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று கூறினார்.

அ. ராசா விவகாரம்
அ. ராசா விவகாரம் குறித்த புகார் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரின் அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனி நபர் விமர்சனம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. அதனால் திமுகவின் அ. ராசா விமர்சனம் தொடர்பான அறிக்கையை அனுப்பி இருப்பதாகவும் தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications