இந்தியாவின் உளவுத்துறைக்கு பல கோடிகளை பட்ஜெட்டில் கொட்டிய மத்திய அரசு.. பின்னணி என்ன
டெல்லி: இந்தியா தனது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் என சுற்றிலும் இந்தியாவிற்கு எதிரான சூழல் நிலவுவதால், இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பான 'இண்டெலிஜென்ஸ் பீரோ' (IB) அமைப்பிற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ. 6,782.43 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. நவீன கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், தொழில்நுட்ப ரீதியாக உளவுத்துறையை வலுப்படுத்துவதே இந்த அதிரடி நிதி உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில் தொழில்நுட்ப உளவுத்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.இதுவே இந்த பட்ஜெட்டின் மிக முக்கியமான அம்சம் ஆகும். உளவுத்துறையின் மூலதனச் செலவினம் கடந்த காலங்களில் வெறும் ரூ. 306.07 கோடியாக இருந்தது. இந்த நிதி, தற்போது ரூ. 2,549.54 கோடியாக பல மடங்கு மத்திய அரசால் உயர்த்தப்பட்டிருக்கிறது.

இந்தத் தொகை எதற்காகப் பயன்படுத்தப்படும்?
சைபர் உளவு, இணையவழி ஊடுருவல்களைக் கண்காணித்தல். தரவு பகுப்பாய்வு : தீவிரவாதத் திட்டங்களை முன்கூட்டியே கண்டறியும் கணினி மென்பொருள்கள். அதிநவீன கண்காணிப்பு: நிகழ்நேர அச்சுறுத்தல்களை மதிப்பிடும் கருவிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள்.
எல்லையில் பலப்படும் பாதுகாப்பு
எல்லைப் பகுதிகளில் சீனாவுடனான பதற்றம் நீடித்து வரும் சூழலில், எல்லையோர உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ. 5,266.51 கோடி தனி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சீனா எல்லையைப் பாதுகாக்கும் ITBP படைக்கு 21.3% கூடுதலாக நிதி வழங்கப்பட்டுள்ளது (ரூ. 11,324.08 கோடி).
துணை ராணுவப் படைகளுக்கான நிதிப் பங்கீடு
மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கு (CAPFs) ஒட்டுமொத்தமாக ரூ. 1,16,789.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 11.4% அதிகமாகும்.
பாதுகாப்புப் படைநிதி ஒதுக்கீடு
CRPF (மத்திய ரிசர்வ் போலீஸ்)₹38,517.93 கோடி, BSF (எல்லைப் பாதுகாப்பு படை)₹29,567.64 கோடி. CISF (தொழில்துறை பாதுகாப்பு) ₹15,973.85 கோடி
பன்முகத்தன்மை கொண்ட பாதுகாப்பு வியூகம்
மத்திய அரசு இந்த முறை வெறும் படைகளை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சமுதாய பாதுகாப்பிலும் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தியுள்ளது. பல்வேறு யுக்திகளை இந்த பட்ஜெட்டில் கையாண்டு உள்ளது.
பெண்கள் பாதுகாப்பு: பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கிறது.
தடயவியல் நவீனமயமாக்கல்: குற்றவாளிகளை அறிவியல்பூர்வமாகப் பிடிக்க தடயவியல் ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்.
துடிப்பான கிராமங்கள் திட்டம்
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள எல்லைக் கிராமங்களில் மக்கள் குடியேற்றத்தை ஊக்குவித்து, அங்கேயே வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம் நாட்டின் எல்லையை வலுப்படுத்த முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது. மொத்தத்தில், இந்த பட்ஜெட் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை வெறும் ஆட்களைக் கொண்டு மட்டும் பாதுகாக்காமல், நவீன தொழில்நுட்பம் மற்றும் வலிமையான உள்கட்டமைப்புடன் ஒருங்கிணைக்க வழிவகை செய்திருக்கிறது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications