சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆர்என் ரவியை சந்திக்கும் எடப்பாடி! பதறியடித்து டெல்லி பறந்த "அதே" மாஜி.. சரியில்லையே.. என்ன நடக்குது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவை சேர்ந்த முக்கிய மாஜி அமைச்சர் ஒருவர் திடீரென டெல்லிக்கு சென்றுள்ளார். இன்று எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்கும் நிலையில்தான் டெல்லியில் அந்த மாஜியின் சந்திப்பு நடந்து உள்ளது.

தமிழ்நாடு அரசியல் உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு பாஜகவில் காயத்ரி கொளுத்திய திரி,, திருச்சி சூர்யா பற்ற வைத்த வெடி என்று மிகப்பெரிய புயலே அடித்து ஓய்ந்து இருக்கிறது. வங்கக்கடலில் உருவான தாழ்வு நிலை புயலாக மாறவில்லை என்றாலும் காயத்ரி தொடங்கி வைத்த தாழ்வு நிலை சூறாவளியாக மாறி பாஜகவை புரட்டி எடுத்து உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் பெற்றுள்ளது. பொதுக்குழு வழக்கு, எடப்பாடியின் மெகா கூட்டணி திட்டம், எடப்பாடி - பாஜக இடையே உள்ள கருத்து வேறுபாடு என்று அதிமுகவும் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.

வார்த்தையை விட்ட எடப்பாடி.. அப்செட்டான பாஜக? இன்றே ஆர்என் ரவியை சந்திக்கும் இபிஎஸ்! 4 பரபர காரணங்கள் வார்த்தையை விட்ட எடப்பாடி.. அப்செட்டான பாஜக? இன்றே ஆர்என் ரவியை சந்திக்கும் இபிஎஸ்! 4 பரபர காரணங்கள்

என்ன நடக்குது?

என்ன நடக்குது?

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநர் ஆர். என் ரவியை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதால் பாஜக அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற போவதாகவும் பல்வேரு செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த செய்திகளுக்கு இடையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி - எடப்பாடி பழனிசாமியின் இன்றைய சந்திப்பு கவனம் பெறுகிறது. பாஜக - அதிமுக உறவு பற்றி இவர்கள் பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி நேற்றுதான் டெல்லியில் இருந்து திரும்பி தமிழ்நாடு வந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி திடீரென அவரை சந்திக்க செல்கிறார். அவரின் இந்த சந்திப்பு பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு சட்ட ஒழுங்கு பற்றி எடப்பாடி பேசுவார். அமைச்சர்கள் மீது புகார்களை வைப்பார். மழை நிவாரணம் பற்றி எடப்பாடி பேசுவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க நேற்று அவசர அவசரமாக மாஜி அமைச்சர் ஒருவர் டெல்லிக்கு சென்றுள்ளார். அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.

டெல்லி

டெல்லி

டெல்லியில் இணை அமைச்சர் ஒருவரையும், மத்திய அமைச்சர் ஒருவரையும் அந்த மாஜி அமைச்சர் சந்தித்து இருக்கிறாராம். சந்திப்பிற்கான காரணம் வெளியே வேறுசொல்லப்பட்டாலும், உண்மையில் தனக்கு எதிராக இருக்கும் வழக்குகள் பற்றி பேசத்தான் அவர் டெல்லி சென்றார் என்றும் கூறப்படுகிறது. அந்த மாஜி அமைச்சர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு உள்ளது. அதே சமயம், சிபிஐ வழக்கு ஒன்றும் உள்ளது. சமீபத்தில் இந்த வழக்கில் திடீரென சிபிஐ கவனம் செலுத்தியது.

சிபிஐ கவனம்

சிபிஐ கவனம்

இதையடுத்தே அந்த மாஜி திடீரென நேற்று டெல்லிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் தனக்கு எதிராக இருக்கும் வழக்குகள் பற்றி அவர் பேசியதாகவும். வேறு சில முக்கியமான அரசியல் நிலவரங்கள் பற்றி பேசியதாகவும் கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தமிழ்நாடு வந்தார். அவர் வந்த போதும் அந்த மாஜி அமைச்சர் தனியாக சென்று சந்தித்து உள்ளார். இந்த மாஜி மட்டும் இப்படி அடிக்கடி பாஜக தலைவர்களை சந்திப்பது.. அதிமுகவில் உள்ள மற்ற டாப் தலைகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

English summary
A former AIADMK minister goes to Delhi and meets with BJP ministers amid Edappadi meet with R N Ravi .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X