வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடத்தில் ஓடிய சரக்கு ரயில்.. தென் சென்னையின் 40 வருட கனவு நிறைவேறியது
சென்னை: சென்னை கடற்கரை- வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை, பரங்கிமலை வரை எப்போது நீட்டிக்கப்படும் என்கின்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வந்தது. இந்நிலையில் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் விரிவுப்பணி ஒருவழியாக முடிந்துவிட்டது. இதனை உறுதிசெய்யும் விதமாக சென்னை கடற்கரை-வேளச்சேரி-பரங்கிமலை மின்சார ரயில் பாதை இணைப்புப் பணி மீதமிருந்த, 5 கி.மீ. தூரத்திற்கு சரக்கு ரயில் நேற்று வெற்றிகரமாக இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட திட்டம் தான் பறக்கும் ரயில். சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வழியாக பரங்கிமலை வரை பறக்கும் ரயில் திட்டம் அமைக்க 1985ம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்ததிட்டம் ஒருதலைமுறைக்கே வயதாகிவிட்ட நிலையில், இப்போது தான் முழுமை அடைந்துள்ளது.கிட்டத்தட்ட 40 வருடம் மக்கள் காத்திருந்தே முழு ரயில் சேவையை பெறுகிறார்கள்.

முதலில் சென்னை கடற்கரை - மயிலாப்பூர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் ரயில் திட்டப் பணிகள் 266 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 1997ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. 2ஆம் கட்டமாக மயிலாப்பூர் - வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டப் பணிகள் 877 கோடியே 59 லட்சம் ரூபாயில் கடந்த 2007ல் முடிக்கப்பட்டது. இதன் பிறகு, வேளச்சேரி - பரங்கிமலை இடையே 3ஆம் கட்ட பணி 495 கோடி ரூபாயில் 5 கிமீ தூரத்திற்கு கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் வெறும் 3 ஆண்டுகளில் 90 சதவீதம் வரை நிறைவடைந்தது. ஆனால் இந்த திட்டத்தை அதற்கு அடுத்து செயல்படுத்துவதில் எந்த பெரிய முன்னேற்றமும் பல ஆண்டுகளாக ஏற்படவில்லை.
அதன்பிறகு ஆரம்பிக்கப்பட்ட சென்னை மெட்ரோவில் கூட ரயில்கள் ஓடத்தொடங்கிவிட்டது.இரண்டாம் கட்ட மெட்ரோவும ஓடிவிட்டது. ஆனால் 15 வருடங்களுக்கு மேலாக சென்னை மக்கள் வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டது. ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையிலான 500 மீட்டர் தூர பணியில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கலால் திட்டமே நீண்ட காலமாக கிடப்பில் இருந்தது.
இந்நிலையில் ஆதம்பாக்கத்தில் இருந்து 500 மீட்டருக்கான பறக்கும்ரயில் திட்டப் பணியில் நிலம் கையகப்படுத்தும் பணி நீதிமன்ற உத்தரவுகளுக்கு பின்னரே நிறைவு பெற்றது. இதனால் கடந்த இரண்டு வருடங்களாக மீண்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பறக்கும் ரயில் திட்டம் நீட்டிப்புக்கு திட்டமதிப்பீடு ரூ.734 கோடியாக மாற்றி அமைக்கப்பட்டு பணிகள் நடந்தது.
இதற்காக தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் அமைக்கப்பட்டு, மேம்பால இணைப்பு பணிகள் நடந்தது. அதன்பிறகு தண்டவாளம் அமைப்பது, மின் மயமாக்கல் உள்பட பல்வேறு பணிகள் நடந்தது.தற்போது அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. தண்டவாளங்களை ஆய்வு செய்து, சேவைகளை இயக்க ஒப்புதல் அளிக்குமாறு தெற்கு கோட்டத்தின் ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதற்காக சரக்கு ரயில் இயக்கி நேற்றுசோதனை நடத்தப்பட்டது. சோதனை வெற்றிகரமாக நடந்தது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, இனி அடுத்தகட்டமாக பரங்கிமலை வேளச்சேரி இடையே உள்ள பாதையில் மின்சார ரயில் ஒன்று இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வேயின் பாதுகாப்பு கமிஷனர் முன்னிலையில் அதிவேக ரயில் இயக்கி இறுதிச் சோதனை நடத்தப்படும். இந்த சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த பிறகு, வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடத்தில் பயணிகள் சேவை விரைவில் தொடங்கும் என்று கூறினார்கள். அனேகமாக ஜனவரியில் வேளச்சேரி பரங்கிமலை இடையே ரயில்கள் ஓட வாய்ப்பு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications