கோடியில் ஒரு முறையே இப்படி நடக்கும்.. மேட்சில் இப்படி ஒரு சம்பவத்தை.. பார்த்து இருக்கவே மாட்டீங்க!
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை: உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சம்பவம் ஒன்று மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது.
பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே இந்தியா வென்றுவிட்டது. இதன் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா தக்க வைத்து உள்ளது.
தற்போது 4வது டெஸ்ட் மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த டெஸ்டில் இந்திய அணியின் ஸ்பின் பவுலர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் கொஞ்சம் எளிதாகவே எதிர்கொண்டனர்.

ஆஸ்திரேலியா
இதனால் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் எடுத்தது. குவாஜா மட்டும் 180 ரன்கள் எடுத்தார். கேமரூன் கிரீன் 114 ரன்கள் எடுத்தார். அஸ்வின் இதில் 6 விக்கெட் எடுத்து அசத்தினார். இதையடுத்து இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். புஜாரா 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆனால் இன்னொரு பக்கம் சுப்மான் கில் நிதானமாக ஆடினார். இவர் 235 பந்துகளில் 128 ரன்கள் எடுத்துள்ளார். இன்னொரு பக்கம் நிதானமாக ஆடிய கோலி சதம் அடித்தார்.

ஆட்டம்
இது அவரின் 28வது டெஸ்ட் போட்டியாகும். அதேபோல் 75வது சர்வதேச சத்தம் ஆகும். மிகவும் நிதானமாக ஆடி 364 பந்துகளில் 186 ரன்கள் எடுத்துள்ளார். இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 1 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. கடைசி நாள் என்பதால் ஆட்டம் பெரும்பாலும் டிரா ஆகும் நிலையில் உள்ளது. இந்த போட்டிக்கு இடையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சம்பவம் ஒன்று மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது.ஆஸ்திரேலியா - இந்தியா மேட்சை விட உள்ளூர் போட்டியில் நடந்த சம்பவம்தான் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

என்ன நடந்தது?
இது மும்பையில் நடந்த ஒரு தோரணமென்ட் ஆட்டம் ஆகும். 3 விக்கெட்டை இழந்து ரோட்பலி என்ற அணி இதில் பேட்டிங் செய்து வருகிறது. 40 + வயது கொண்டவர்களுக்கான ஆட்டம் ஆகும் இது. இதில் அந்த அணி 17 பந்தில் 32 ரன்களை எடுக்க வேண்டும். வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரோட்பலி அணி பேட்ஸ்மேன் அமித் என்பவர் பாயிண்ட் திசையில் அடிக்க அழகாக கைக்கு வந்த பந்தை பிடிக்க முடியாமல் பீல்டர் திணறி உள்ளார். கைக்கு வந்த பந்தை பிடிக்காமல், அதன்பின் பவுண்டரியை நோக்கி ஓடி உள்ளார். அதன்பின்பும் பல முறை பந்தை பிடிக்க முடியாமல் அவர் திணறி உள்ளார்.

பிடித்தார்
அதன்பின் அடித்து பிடித்து உருண்டு புரண்டு பந்தை ஒருவகையில் அவர் பிடித்தார். அவர் பந்தை கீழே விழுந்து பிடித்த பின்பு நடந்த சம்பவம்தான் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் பந்தை பிடித்துவிட்டு தூக்கி வீசிய போது பந்து பறந்து அவர் காலில் பட்டுள்ளது/ காலில் பட்டு அப்படியே எதிர் திசையில் பவுண்டரி சென்றுள்ளது. கிரிக்கெட்டில் இதற்கு முன் பல காமெடியான சம்பவங்கள் நடந்து இருந்தாலும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications