ஏட்டு ஏகாம்பரம்..பார்க்கத்தான் சிரிப்பு போலீஸ்..'ஆகாத' கூட்டுடன் அமர்க்கள என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்!
சென்னை: சிக்காம ஓடுனா சட்டனு போலீஸ் சுடுது.. அப்படித்தான் 'தண்ணி' காட்டுன ரவுடி ஒருத்தரை 'சம்பவம்' செய்தது போலீஸ் சென்னைக்கு மிக அருகே!
விசுவாசமாக இல்லாம போவேன்னு மீட்டிங்கில விசுக்கு கோபப்பட்ட காரணத்தாலேயே அந்த என்கவுன்ட்டர் சம்பவமே நடந்துச்சாம்- அரசியலில் இதெல்லாம் சகஜம்தானப்பா!

ஆனால் விசுவாசம் காட்ட போனது யாருக்கு என்பதில்தான் சங்கதியே இருக்காம்.. இதுலதான் நம்ம ஏட்டு ஏகாம்பரம் என்ட்ரி.. பார்க்கத்தான் ஆளு சிரிப்பு போலீஸ்... உள்ளுக்குள்ளே ரத்தம் நாடி நரம்பு எல்லாம் ஊறிப் போன பாம்பே பாட்ஷாவாம் அந்த ஏட்டு ஏகாம்பரம்.
தோற்றத்திலும் வாழ்க்கையிலும் எளிமையாக யதார்த்த நாயகனாக உலா வரும் ஏட்டு ஏகாம்பரம் மீது ஏடா கூடா புகார்களை கூடவே சுற்றி வரும் அல்லக்கைகளே அரசல் புரசலாக பரப்பிவிடுவது வழக்கம். ஏடா கூடா வீடியோக்கள்தான் ஏகாம்பரத்தின் முதலீடு என்பதெல்லாம் 'தொழிலுக்கு' வந்த புதுசுலதானாம்..
இப்ப எல்லாம் வேற லெவல் டீலிங்தானாம்.. 'கை' வைக்காம இருக்க 'கல்லா'கட்டு என்பது கறாரா இருப்பவர் ஏட்டு ஏகாம்பரம்! அப்படி கல்லா கட்டிவிட்டு காட்பாடி கூட்ரோட்டுல மூக்கு சிந்துன லாரிமூர்க்கனை பற்றி சில நாட்களுக்கு முன்னர் கதை கதையாக சொன்னாங்க..
சரி இப்ப என்கவுண்ட்டர் விவகாரத்துக்கு வருவோம்.. லாரி மூர்க்கனைவிட 'தொழில்' சீனியரையே ஏட்டு ஏகாம்பரம் டச் செய்திருக்கிறார். என்னடா எழவெடுத்த வம்புன்னு 'தொழில்' சீனியர் சென்னைக்கு மிக அருகில் 'ஒரு ஏற்பாடு' செய்து கொடுத்திருக்கிறார்.. 'ஏட்டு ஏகாம்பரம்' வாழ்க்கையிலேயே பார்க்காத பெருத்த வருமானமான 'ஏற்பாடு'தான் அதான்.
ஆனால் அந்த 'ஏற்பாடு' சுமூகமாக நடக்கலையாம்.. இதுலதான் அந்த ரவுடி விசுவாசமாக இருக்க முடியாதுன்னு சொல்லிட்டாராம்... இத்தனைக்கும் அந்த ரவுடியும் கூட கொஞ்ச நாள் ஏட்டு ஏகாம்பரத்துடன் கூட்டாளியா இருந்தவரு.. கஸ்டடியில் இருந்தவரு..
நம்மகிட்ட இருந்த பய நமக்கு 'லம்ப்பா' கிடைக்கும் 'ஏற்பாட்டுக்கு' லஜ்ஜையாக இருக்கானே என மீண்டும் 'தொழில்' சீனியரிடம் மூக்கு சிந்தியிருக்கிறார்... இதனால்தான் விசுவாசம் காட்ட மறுத்த அந்த 'ரவுடி' இப்ப ரத்தம் சிந்தி நடுத்தெருவுல செத்துப் போயிருக்கிறாராம்! யோவ் ஏட்டு! எத்தனுக்கு எத்தன்யா! என ஒரே பாராட்டுதான் பழனிக்கு பக்கத்துலயாம்!
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications