ஐசியூவில் இணைந்த இரு நெஞ்சங்கள்! கேரளாவில் மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்! விபத்தையும் வென்ற திருமணம்
சென்னை: எத்தனையோ திருமணங்கள், மணமேடைகள் வரை வந்து நின்று விடுகின்றன.. அதிலும், தாலி கட்டுவதற்கு கடைசி நொடியிலும் பல திருமணங்கள் நின்றுபோய்விடுகின்றன. சில சமயம் சம்பந்தப்பட்ட மணப்பெண்ணோ அல்லது மாப்பிள்ளையோ இந்த திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள். ஆனால், தற்போது கேரள மாநிலத்தில் நடந்துள்ள ஒரு திருமணம் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. இந்த சம்பவம் சோஷியல் மீடியாவிலும் வெளியாகி வைரலாகி கொண்டு உள்ளது.. என்ன நடந்தது தெரியுமா?
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ளது தும்போளி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் ஷாரோன்... இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நிச்சயமாகி இருந்தது..

அதே பகுதியை சேர்ந்த ஆவணி என்ற இளம்பெண்ணை திருமணத்துக்கு பார்த்து பேசியிருந்தனர்.. மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒருவரையொருவர் பிடித்து விட்டது.. இதனால் இரு குடும்பத்தினரும் பேசி, திருமணத்துக்கு நாள் பார்த்திருந்தனர்..அதன்படி, நேற்றைய தினம்தான் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
மணமக்கள் மகிழ்ச்சி
ஆலப்புழாவில் உள்ள ஒரு மண்டபத்தில் இவர்களின் திருமணம் நடத்த முடிவாகி, அதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன. நேற்று காலை மேக்கப் போடுவதற்காக ஆவணி தன்னுடைய தோழிகள் 3 பேருடன் காரில் கோட்டயத்திற்கு கிளம்பி சென்றார்.
பார்லரில் மேக்கப் போட்டு முடிந்ததுமே, மண்டபத்திற்கு மீண்டும் திரும்பினார்.. அப்போது வழியில் கார் எதிர்பாராதவிதமாக மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது...
விபத்தில் மணப்பெண்
இதில் ஆவணி உள்பட 4 பேருமே படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்கள்.. மணப்பெண் ஆவணிக்கு கால் மற்றும் முதுகெலும்பில் படுகாயம் ஏற்பட்டது.. இதையடுத்து, இவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்..
அதற்குள் விபத்து குறித்து தகவலறிந்த மணமகன் ஷாரோன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர்.. மணமகள் ஆவணியை பார்த்ததுமே ஷாரோன் கதறி அழுதார்..
ஐசியூவில் தாலி கட்டிய மணமகன்
ஆனாலும் மனம் தளராத ஷாரோன், என்ன ஆனாலும்சரி, ஏற்கனவே குறிக்கப்பட்ட முகூர்த்தத்திலேயே ஆவணிக்கு தாலி கட்ட விரும்புவதாக சொன்னார்..
இதைக்கேட்டதுமே, இரு வீட்டு குடும்பத்தினரும், உறவினர்களும் சம்மதம் தெரிவித்தனர்.. பிறகு அனைவருமே சேர்ந்து இதுகுறித்து ஆவணிக்கு சிகிச்சை தந்து கொண்டிருந்த டாக்டர்களிடம் ஆலோசித்தனர்.. அதற்கு மருத்துவர்களும் சம்மதம் சொன்னார்கள்.. இதையடுத்து மருத்துவமனையில், குறிப்பிட்ட முகூர்த்தத்தில் ஐசியூவில் உள்ள ஆவணிக்கு மணமகன் ஷாரோன் தாலி கட்டினார்.
தடபுடல் விருந்து
இதனிடையே, விபத்து குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில், இரு வீட்டினரின் உறவினர்களும், நண்பர்களும் புடைசூழ மண்டபத்திற்கு வந்தனர்..
எனினும் தங்களது வருத்தத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், அவர்கள் அனைவருக்குமே தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது. மணமகளுக்கு ஐடிசியூவில் மணமகன் தாலி கட்டிய சம்பவம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. மணமகள் விரைந்து நலம் பெற வேண்டும் என்றும் பலரும் பதிவிட்டு, மணமக்களுக்கு வாழ்த்துக்களையும் சொல்லி வருகிறார்கள்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications