இவரா? ஆளுநராகவா? கூடவே கூடாது! ஹெச்.ராஜாவுக்கு எதிராக குடியரசு தலைவருக்கு பறந்த கடிதம்! பரபர பாஜக..!

Subscribe to Oneindia Tamil

சென்னை : கேரள மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நியமிக்கப்பட இருப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியான நிலையில், குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் அவரை ஆளுநராக நியமிக்க கூடாது என மூத்த வழக்கறிஞர் ஒருவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் திமுக - அதிமுக என இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன.

ஒரு காலத்தில் நீண்ட காலமாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு மாநிலக் கட்சிகளை நம்பி இருக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகிகள்

பாஜக நிர்வாகிகள்

பல தேர்தல்களில் அதிமுக திமுகவுடன் கூட்டணி வைத்து தங்கள் கட்சியினரை சட்டமன்றத்திற்குள் அந்தக் கட்சியால் அனுப்ப முடிந்தது. அதேநேரத்தில் தமிழகத்தில் தற்போது வரை பாஜகவால் குறிப்பிடத்தகுந்த அங்கீகாரத்தை பெறவே முடியவில்லை. இல.கணேசன் , பொன் ராதாகிருஷ்ணன் , தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி தற்போது அண்ணாமலை வரை பல மாநில தலைவர்கள் நியமிக்கப்பட்டாலும் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற முடியாததால் பாஜக நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

உயர் பதவி

உயர் பதவி

அதேநேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி ஆளுநர் பதவியும் வழங்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் தமிழக மக்களிடையே எப்படியாவது ஆழமாக வேரூன்றி விடவேண்டும் என்பதுதான். அந்த வகையில் கடந்த ஆட்சிக்காலத்தில் பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார். அடுத்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததால் அமைச்சராகும் வாய்ப்பு பறிபோனது. இதையடுத்து தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் குறிப்பிடத்தகுந்த அளவு தீவிரமாக பணியாற்றியதால் அவருக்கு தெலுங்கானா மாநில ஆளுநர் பதவியும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை வழங்கி அழகு பார்த்தது பாஜக தலைமை.

ஹெச்.ராஜா ஆளுநர்?

ஹெச்.ராஜா ஆளுநர்?

அதற்கு அடுத்ததாக பதவி ஏற்ற எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும் பாஜக மூத்த தலைவரான கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் பாஜகவினர் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். தீவிரமாக பணியாற்றினால் மத்திய அமைச்சராகவும் அல்லது ஆளுநராகவோ பாஜக தலைமையால் நியமிக்கப்படுவது உறுதி என நிர்வாகிகள் கருதுகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாஜக மூத்த தலைவரும் அதிரடி பேச்சுகளுக்கு சொந்தக்காரர்களான எச் ராஜா கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாக சமூகவலைதளங்களில் சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது.

ஜனாதிபதிக்கு கடிதம்

ஜனாதிபதிக்கு கடிதம்

இந்நிலையில் அவரது ஆசையில் இடி விழுந்தது போல, குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் ஹெச்.ராஜாவை ஆளுநராக நியமிக்க கூடாது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான துரைசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்" கேரள ஆளுநராக பாஜக மூத்த தலைவரான ஹெச் ராஜா நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், பெண்களை தரம் தாழ்ந்து அரசியல் கட்சித் தலைவர்களை இழிவாகப் பேசியதாகவும் அவர் மீது குற்ற வழக்குகள் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது.

நிர்வாகிகள் அதிர்ச்சி

நிர்வாகிகள் அதிர்ச்சி

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் மதுரை அல்லது பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வாய்ப்புள்ள நிலையில், அவரை ஆளுநராக நியமித்தால் அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் பாதிக்கப்படும். தீவிர இந்துத்துவ ஆதரவாளரான அவரால் மத மோதல்கள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது. எனவே அவரைப் போன்ற தீய சக்திகளை மாநிலத்தின் ஆளுநராக நியமிக்ககூடாது" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது பாஜக நிர்வாகிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+