காவி திருவள்ளுவர்-சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி-ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட்டால் புதிய சர்ச்சை!
சென்னை: திருவள்ளுவர் தினத்தில் காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தை பகிர்ந்ததுடன் "சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி" எனவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் விழா நேற்று உலகத் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவின் 2-ம் நாளான இன்று மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் விழாவின் 3-ம் நாளாக நாளை காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இன்று திருவள்ளுவர் திருநாளும் கடைபிடிக்கப்படுகிறது. திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கருத்தும் படமும் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. திருவள்ளுவர் படத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவினர் காவி மயமாக்கினர். அதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இருந்த போதும் பாஜகவினர் தொடர்ந்து காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தையே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் அதேபோல காவி உடை திருவள்ளுவர் படத்தை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் திருவள்ளுவரை சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இதுதான் இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் திருவள்ளுவர் தின வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது திருவள்ளுவர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இதற்கு அவரது எக்ஸ் பக்கத்திலேயே கடும் எதிர்ப்புகள் பதிவிடப்பட்டும் வருகின்றன.
ஏற்கனவே வள்ளலாரை சனாதன தர்மத்துடன் இணைத்து பேசி பெரும் சர்ச்சையில் ஆளுநர் ரவி சிக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications