புளியந்தோப்பில் ரெடியாகும் புதிய மேம்பாலம்.. வட சென்னையில் நாளை முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்
சென்னை: சென்னை புளியந்தோப்பு டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலையில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற உள்ளதால் நாளை முதல் ஓராண்டிற்கு போக்குவரத்து மாற்றப்படுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை வடசென்னையின் முக்கிய சாலைகளில் (திருத்தணி ரேணிகுண்டா சாலை) ஒன்றாக உள்ளது. இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டால் அந்த பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்நிலையில் மேம்பால பணிகள் காரணமாக சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், "சென்னை மாநகராட்சியும், ரயில்வே துறையும் இணைந்து புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.2) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெரம்பூா் மற்றும் வியாசா்பாடியிலிருந்து டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலை, கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக புரசைவாக்கம் வரும் வாகனங்கள் ஒருவழிப் பாதையில் செல்ல வேண்டும்.
புரசைவாக்கம், டோவெட்டனில் இருந்து பெரம்பூா், வியாசா்பாடி, மாதவரம் வழியாக டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலையில் கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வரும் வாகனங்கள் டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலை, ஸ்டீபன்சன் சாலை, பெரம்பூா் பிரதான சாலை தெற்கு, முரசொலி மாறன் மேம்பாலம், பெரம்பூா் ரயில் நிலையம் சந்திப்பு வழியாக சென்று அவா்களின் இலக்கை அடையலாம்" என போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications