சென்னை போலீஸ் செய்த பெரிய மாற்றம்.. எண்ணூர் மணலி விரைவு சாலையில் புதிய சிக்கல்
சென்னை: சென்னை எண்ணூர் மணலி விரைவுச்சாலை என்பது துறைமுகத்திற்கு செல்லும் சாலையாகும்... இங்கு கனரக வாகனங்கள் அதிகமாக செல்லும் நிலையில், போக்குவரத்து மிக அதிகமாக உள்ளது.. இந்த சாலையில் போலீசார் நட்டு வைத்த பெரிய தூண் சைஸ் கற்கள் காரணமாக விபத்துக்ள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை எண்ணூர் விரைவுச்சாலை துறைமுகத்தை இணைக்கும் முக்கியச் சாலையாக உள்ளது. இதன் காரணமாக பெரிய லாரிகள், ட்ரக்குகள் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றன. இதுதவிர எண்ணூர், மணலி பகுதி மக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக எஸ்.பி.ஐ காலனி, பட்டினத்தார் கோயில், காமதேனு நகர், மஸ்தான் கோயில் என பல குடியிருப்பு பகுதி மக்கள் எண்ணூர் மணலி விரைவுச் சாலையை தினமும் வேலைக்கு சென்று வர பயன்படுத்தகிறார்கள்.

இந்நிலையில் சென்னை துறைமுகத்தில் இருந்து, மணலி நோக்கி வந்த கன்டெய்னர் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதும் நடக்கிறது.குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது அதிகமாக உள்ளது. திருவொற்றியூா், மணலி, தண்டையாா்பேட்டை பகுதிகளில் சி.பி.சி,எல்., ஐ.ஓ.சி., எஸ்.ஆா்.எஃப்., எம்.ஆா்.எஃப்., கான்காா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கனரகத் தொழிற்சாலைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட குறு, சிறு தொழிற்சாலைகளும் அமைந்திருக்கின்றன. இங்கு வேலை செய்யும் பலர் இந்த சாலையைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
இந்நிலையில் எண்ணூர் மணலி விரைவுச்சாலையில் கனரக வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தால், பிரதான சாலையின் நடுவே ஐந்து மீட்டருக்கு ஒரு சிமெண்ட் கல்லை அமைத்திருக்கிறது மாதவரம் போலீஸ்.. குறிப்பிட்ட வழியில் மட்டுமே கண்டெய்னர்கள் செல்ல வேண்டும என்பதற்காகவே இந்த ஏற்பாட்டினை போலீசார் செய்துள்ளனர். மேலும் லாரிகள் கற்களுக்கு இடையில் புகுந்து விதிமீறலில் ஈடுபடாமல் இருக்க கற்கள் இடையே கயிறும் கட்டி வைத்துள்ளார்கள்.
ஆனால் இந்த மாற்றத்தினை ஏற்று கனரக வாகனங்கள் விதியை சரிவர கடைபிடிக்கவில்லை.. இதன் காரணமாக விதிமீறல் அதிகரித்ததுடன், கனகர வாகனங்களிலும், கற்களிலும் மோதி இருசக்கர வாகன ஓட்டிகள் அதிக அளவில் விபத்தில் சிக்குகிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் ஐந்து இருசக்க வாகன ஓட்டிகள் இறந்து போனதாக புகார் எழுந்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications