திடீரென பரவும் மர்ம காய்ச்சல்.. பல மாநிலங்களில் மக்கள் பாதிப்பு.. என்ன காரணம்? அறிகுறிகள் என்னென்ன?
எல்லோருக்கும் கடந்த பிப்ரவரி பாதியிலேயே ஒருமுறை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சென்னை: இந்தியாவில் மக்கள் பலருக்கும் திடீரென காய்ச்சல் ஏற்படுவதும், கடுமையான உடல் வலி ஏற்படுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் பலரும் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தியாவில் இருக்கும் மக்கள் இடையே திடீரென ப்ளூ காய்ச்சல் ஒன்று பரவிக்கொண்டு இருக்கிறது. பல இடங்களிலும் மக்கள் சாரைசாரையாக மருத்துவமனைக்கு சென்று கொண்டு இருக்கின்றனர்.
பொதுவாக கிளைமேட் மாறுவதால் ஏற்படும் சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் மோசமானதாக உள்ளது. மருந்து எடுத்தாலும் குணமாகவில்லை என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.

இன்ப்ளூயன்சா
சில மருத்துவர்கள் இதை H3N2 இன்ப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் என்று கூறுகின்றனர். ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை. இது ஒரு வகை ப்ளூ காய்ச்சலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. சளி, இருமல், அதிக காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தும்மல், மூக்கு அடைப்பு , தொண்டை புண், கண்களில் நீர் வடிதல் மற்றும் மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும் இது பலருக்கும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிலருக்கு 2 - 4 நாட்கள் இந்த காய்ச்சல் நீடிக்கிறது.

மீண்டும் வரும்
சிலருக்கு இந்த காய்ச்சல் போனதும் மீண்டும் 2 வாரத்தில் வருகிறது. சிலருக்கு 4 வாரங்கள் கூட இந்த காய்ச்சல் நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு பலரும் கூட்டம் கூட்டமாக செல்கிறாரக்ள். மருத்துவமனைகளுக்கு 30-40 சதவிகித கேஸ்கள் இப்படித்தான் வருகின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். குழந்தைகளுக்கும் இந்த பிரச்சனை ஏற்படுவதாகவும், பலருக்கும் மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதாவது சளி கடுமையாக இதயத்தை நெருக்கி உள்ளதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் யாருக்கும் ஆக்சிஜன் லெவல் குறையவில்லை. அதேபோல் யாருக்கும் செயற்கை சுவாசம் அளிக்கும் அளவிற்கு நிலை ஏற்படவில்லை.

இரண்டாவது முறை
இப்போது இந்த காய்ச்சல் ஏற்படும் பலரும் இரண்டாவது முறை பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் எல்லோருக்கும் கடந்த பிப்ரவரி பாதியிலேயே ஒருமுறை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக இதனால் கடுமையான உடல் வலி ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. அடித்து போட்டது போல இதனால் உடல் வலி ஏற்படுகிறதாம். நமக்கு ஒரு வகையான வைரஸ் தாக்குதல் ஏற்படும் போது இன்னொரு வகை வைரசுக்கான எதிர்ப்பு சக்தி இருக்காது. அப்படித்தான் இந்த முறையும் சிறிய சிறிய வைரஸ் காய்ச்சல்கள் ஏற்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா காரணமாக நம்முடைய எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை மட்டுமின்றி கோவை, பெங்களூர், டெல்லி, மும்பையிலும் இந்த காய்ச்சல் ஏற்படுகிறதாம்.

ஆதாரம்
இது தொடர்பாக நோடல் அதிகாரி & கதிரியக்க நிபுணர் -தமிழ்நாடு அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை. ஹெல்த் செக் அப் தலைமை மருத்துவர், ஆனந்த் குமார் செய்துள்ள போஸ்டில், இந்த சீசனில் வரும் ஜுரம்..இருமல் தலைவலி..வயிறு உபாதை செய்வதோடு.. மீண்டும் மீண்டும் தாக்குகிறது!மருத்துவரை மாற்றுவது. மருந்து மாற்றி மாற்றி எடுப்பது.. தேவையற்ற பல பரிசோதனை செய்வது அவசியமில்லை.. Multiple viruses தாக்குதல் (அ) எதிர்ப்பு சக்தி ஏற்படல.. இது ஒரு ப்ளூ அவ்வளவே! கவனம், என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications