தமிழ்நாட்டில் புதிய சுங்கச்சாவடி.. ஜூன் 12ல் திறப்பு.. கார், வேனுக்கு ரூ.105 கட்டணம் நிர்ணயம்!
சென்னை: தஞ்சை மானம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சுங்கச்சாவடி ஜூன் 12ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. தஞ்சை - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடியில் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.105 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதனால் சுங்கச்சாவடிகளையும் அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலமாக தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் சுங்கச்சாவடிகள்
அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 1,228 சுங்கச்சாவடிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 78 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. அதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும்.
மக்கள் கோரிக்கை
அண்மையில் கூட தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதனால் தமிழ்நாட்டில் காலாவதியாகிவிட்ட சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இதுதொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு மத்திய அரசுக்கு பல்வேறு முறை கடிதம் எழுதி இருந்தார்.
புதிய சுங்கச்சாவடிகள்
இந்த நிலையில் தஞ்சாவூரில் புதிதாக மத்திய அரசு ஒரு சுங்கச்சாவடியை திறக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் வெளியாகி இருக்கும் அறிவிப்பில், தமிழ்நாட்டில் புதிதாக சுங்கச்சாவடி திறக்க உள்ளது. தஞ்சை - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாத்தோப்பு - சோழபுரம் இடையே மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 12ல் திறப்பு
இந்த சுங்கச்சாவடி ஜூன் 12ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த 2 சுங்கச்சாவடிகளில் இலகுரக வாகனங்களான கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகங்கள் ஒருமுறை செல்வதற்கு ரூ.105 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே வழியில் ஒருமுறை பயணிக்க ரூ.160 கட்டணமாகவும், வணிக வாகனங்களுக்கு ரூ.55 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கட்டணம் எவ்வளவு
அதேபோல் மினி பஸ் போன்ற வாகனங்களுக்கு ரூ.170 கட்டணமாகவும், இருமுறை பயணிக்க ரூ.255 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளுக்கு ரூ.360 கட்டணமாகவும், கனரக வாகங்களுக்கு ரூ.560ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications