கைகோர்த்த 2 துருவங்கள்.. பிடிஆர் எடுத்த அதிரடி முடிவு.. இனி திமுகவை அசைக்க முடியாதே.. ஸ்டாலின் குஷி
சென்னை: மதுரையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் மூர்த்தி இடையே நெருக்கம் ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் நிறைய திட்டங்களை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அதை நிறைவேற்றி வருகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். சமீபத்தில் அவர் ஜப்பான் சென்றிருந்த போது, முதுமையிலும் பலர் ஆரோக்கியமாக இருப்பதை கண்டார்.

குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரக்கூடிய எந்த ஒரு நோயும் பெரும்பாலான முதியவர்களுக்கு இல்லை என்பதை கண்டறிந்துள்ளார் மா.சு. ! இதற்கான, காரணத்தையும் அறிந்துள்ளார். அதாவது, ஜப்பானில் நடை பாதைகளில் முதியவர்களுக்கென்று 8 கி.மீ. தொலைவிற்கு நடைபயிற்சி நடைபாதை ஒன்றை ஜப்பான் அரசு உருவாக்கியிருப்பதும் அதில் முதியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதும்தான் என்பதும் தெரிந்து கொண்டிருக்கிறார்.
இதனை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தும் முயற்சியில் இறங்கிய அமைச்சர் மா.சு., அது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்க, அருமையான திட்டம் என பாராட்டிய முதல்வர், அதற்கு க்ரீன் சிக்னல் தந்திருக்கிறார். அதன்படி, தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் 'நலவாழ்வு நடைபயிற்சி சாலைகள் ' எனும் திட்டத்தை நவம்பர் 4-ந்தேதி தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
ஹெல்த் வாக் திட்டம்: இந்த ஹெல்த் வாக் திட்டம் தொடங்கப்பட்டதில் எதிரும் புதிருமாக இருந்த 2 அமைச்சர்கள், ஒன்றாகியிருக்கிறார்கள் என்கிறது அறிவாலயம். அதாவது, நேற்று ஹெல்த் வாக் திட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. மதுரையில் தொடங்கப்பட்ட திட்டத்தை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் இருவரும் கலந்து கொண்டு தொடங்கி வைத்திருக்கிறார்கள். மதுரை அரசியலில் இந்த 2 அமைச்சர்களும் பெரிதாக நெருக்கமாக இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறின. .
இருவருக்கும் ஏழாம் பொருத்தம் தான். கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி இந்த இரண்டு அமைச்சர்களும் தனித்தனி ரூட்டில் தனி ஆவர்த்தனம் செய்ததாக எதிர்க்கட்சிகள் புரணி பேசி வந்தன .
ஒருவரை வீழ்த்த ஒருவர் என அரசியல் சித்து விளையாட்டு செய்வார்கள். ஒருவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மற்றவர் கலந்து கொள்வதை பெரும்பாலும் தவிர்ப்பார்கள என்றெல்லாம் கூட எதிர்க்கட்சிகள் கச்சை கட்டி வந்தன.
சமீபத்தில் கூட, மதுரை மாநகராட்சி சார்பில் சாலை துப்புரவு செய்யும் பணிகளுக்காக 2 கருவிகள் வாங்கப்பட்டன. அதனை பயன்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்ததால், ஒரு கருவியை மூர்த்தியும், மற்றொரு கருவியை பழனிவேல் தியாகராஜனும் தொடங்கி வைக்கப்படுவதாக நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்பட்டது என்றும் கூட அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டன.
இதற்காக ஒரே நிகழ்ச்சி 2 முறை நடத்தப்பட்டது. இப்படி மதுரையில் 2 அமைச்சர்கள் செய்யும் தனி ஆவர்த்த அரசியல் என்று எதிர்க்கட்சிகள் வைத்த புகார் திமுகவிற்குள் எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கின. முதல்வர் ஸ்டாலினுக்கும் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான், ஹெல்த் வாக் திட்டம் தொடக்க நிகழ்ச்சியில் 2 அமைச்சர்களும் சேர்ந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் ? என்று மதுரை மாவட்ட திமுகவினரே ஆச்சரியப்பட்டனர்.
தேவர் ஜெயந்தி விழாவுக்காக கடந்த வாரம் பசும்பொன் வந்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பும் வரையில் தன்னுடன் பழனிவேல் தியாகராஜனைத் தான் அழைத்து சென்றுள்ளார் ஸ்டாலின். சமீபகாலமாக தியாகராஜனுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தாத ஸ்டாலின், இந்த தேவர் ஜெயந்தி நிகழ்வுக்காக வந்தபோது தியாகராஜனுடம் தான் நிறைய விசயங்களை பேசியிருக்கிறார். குறிப்பாக, தமிழக அரசின் நிதி நிலைமைகள் குறித்து சில ஆலோசனைகள் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், தேர்தல் நெருங்கி வருவதால் மதுரை அரசியல் எனக்கு சங்கடத்தை தருகிறது. இருவரும் இணைந்து தேர்தல் பணிகளை கவனிக்க வேண்டும் என்று சொன்னதாகவும் தகவல் கிடைக்கிறது. அதற்கு, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ; அவரும் என்னிடம் நட்பாகவே இருக்கிறது. அவரிடம் (மூர்த்தி) நீங்கள் அறிவுறுத்துங்கள் என இயல்பாக தியாகராஜன் சொல்லியிருக்கிறார். இதனையடுத்து மூர்த்தியை தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளை செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதன் எதிரொலியாகத்தான், ஹெல்த் வாக் திட்ட தொடக்க நிகழ்வில் இரண்டு அமைச்சர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications