கலங்கிய ஏ.ஆர் ரகுமான்.. உடனே ஸ்டாலின் தந்த வாக்குறுதி.. பல வருட ஏக்கம்.. சென்னைக்கு வந்த செம நியூஸ்
சென்னை: சென்னையில் நடத்தப்பட இருந்த இசை நிகழ்ச்சியை ஏ ஆர் ரகுமான் தள்ளி வைத்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான வாக்குறுதி வழங்கி உள்ளார். முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு தமிழ்நாடு மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்த இருந்தார். அவரின் கான்சர்ட்டிற்கு நந்தனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நேற்று இதற்கான ஏற்பாடுகள் நடந்து முடிந்து மாலை நிகழ்வு நடக்க இருந்தது.

ஆனால் சென்னையில் நேற்று பிற்பகலில் இருந்து கனமழை பெய்து வந்தது. சென்னையில் நேற்று பிற்பகலில் இருந்து வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதேபோல் எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை விடாமல் பெய்தது.
இந்த மழை காரணமாக சென்னையில் நடத்தப்பட இருந்த இசை நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஏ. ஆர் ரகுமான் செய்த போஸ்டில், மழை காரணமாக சென்னையில் நடத்தப்பட இருந்த இசை நிகழ்ச்சியை தள்ளி வைத்து உள்ளோம். நமது அரசாங்கத்தின் உதவியுடன் .. கலை நிகழ்ச்சிகள், மெகா ஷோக்கள் மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சிறப்பான கட்ட உள்கட்டமைப்பை நாம் அரசு மூலம் உருவாக்குவோம் என்று நம்புகிறேன், என்று ஏ ஆர் ரகுமான் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், சென்னை இந்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றும். ஈசிஆரில் இல் நிறுவப்படும் #KalaignarConventionCentre, பெரிய வடிவ கச்சேரிகள், நிகழ்ச்சிகள், நிகழ்வுகள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளை நடத்தக்கூடிய உலகத்தரம் வாய்ந்த வசதியாக இருக்கும் இயற்கையான சூழ்நிலையில், ஹோட்டல்கள், உணவு விடுதிகள், பார்க்கிங் இடங்கள் மற்றும் சிறந்த இணைப்புடன் இது நகரத்தின் புதிய கலாச்சார சின்னமாக அந்த சென்டர் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த மையம் குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு மையம் சென்னையில் அமைக்கப்படும். 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில் சர்வதேச பன்னாட்டு மையம் கருணாநிதி பெயரில் அமைக்கப்படும் என்றும், உலகில் பல நாடுகளில் இருப்பது போல நட்சத்திர தங்கும் விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மிக பிரமாண்ட உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கமாக இது அமையும் எனத் தெரிவித்தார்.
உலகளாவிய தொழில் கண்காட்சிகள், திரைப்பட நிகழ்வுகள், பன்னாட்டு மாநாடுகள் போன்ற நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறும், சிங்கப்பூர் ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது இந்த எண்ணம் உதயமானது. மிக பிரம்மாண்டமான முறையில் கலைஞர் கன்வென்சன் சென்டர் அமையவுள்ளது எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மொத்தம் 5000 பேர் அமரும் வகையில் இந்த சென்டர் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல காலமாக இந்த கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் அதை நிறைவேற்றும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications