இதான் கனிமொழி.. சூப்பர் அறிவிப்பு.. வயிற்றில் பால் வார்த்த திமுக.. திக்குமுக்காடி போன தூத்துக்குடி
கனிமொழி எம்பி, மீனவர் நலனுக்காக தனி வங்கி உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்
சென்னை: ஒரு நல்ல செய்தியை கனிமொழி எம்பி சொல்லி உள்ளார்.. இதனால், மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்..
பொதுவாக, எந்த விவகாரமாக இருந்தாலும் எம்பி கனிமொழி, மத்திய அரசிடம் வெளிப்படையான கோரிக்கையை வைத்து விடுவார்.
அது வெளிநாடுகளில் தமிழர் நலன் என்றாலும் சரி, மீனவர்கள் நலன் சார்ந்த விஷயம் என்றாலும் சரி, கூடுதல் அக்கறை காட்டிவிடுவார்.

சுஷ்மா
ஆட்சியில் 10 வருஷம் இல்லாதபோதும் இந்த நடைமுறையை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.. அதிலும் சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது, தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், கனிமொழி உடனே சுஷ்மாவிடம் கொண்டு போய்விடுவார். சுஷ்மாவும், கனிமொழியின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தந்து உதவுவார்.

தூத்துக்குடி
இப்படித்தான் ஒருமுறை தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 40 மீனவர்கள் கரை திரும்பவில்லை.. அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவும், உடனே அதையும் உள்துறை அமைச்சகம் நிறைவேற்றி தந்தது.. இதற்காக அமித்ஷாவுக்கு தனியாகவே ஒரு ட்வீட் போட்டு நன்றி தெரிவித்திருந்தார் கனிமொழி.

சூப்பர் அறிவிப்பு
தான் சார்ந்த தூத்துக்குடியானது, கடல் சார்ந்த மாவட்டம் என்பதால், மீனவர்கள் தொடர்பான பிரச்சனைகள் இங்கு நிறைய ஏற்படுவது இயல்பான ஒன்று.. அந்த வகையில் தொடர்ந்து மீனவர் நலனிலும் கனிமொழியின் அக்கறை அதிகரித்து கொண்டே வருகிறது.. இப்போதும் ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளம் மற்றும் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அடிக்கல்
இந்த நிகழ்ச்சியில், ரூ.25 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளம் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல்லை கனிமொழி எம்பி நாட்டினார்... மேலும், மீனவர்களுக்கு மானிய விலையில் படகில் வெளிப்பொருத்தும் எஞ்சினையும் பயனாளிகளுக்கு வழங்கினார்...

குறைகள்
இதையடுத்து கனிமொழி பேசும்போது, "தமிழகத்தில் மீனவர்களின் குறைகளை அவர்களின் பக்கம் நின்று கேட்டு நிவர்த்தி செய்து கொடுக்கும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது... கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, தற்பொழுது ஆளும் அரசாக திமுக இருந்தபோதிலும் மீனவர்களின் குறைகளை கேட்டு சரிசெய்யும் அரசாகத்தான் செயல்பட்டு வருகிறது.

அடிக்கல்
அந்த வகையில் இப்போது தூத்துக்குடி துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு படகில் வெளி பொருத்தும் என்ஜின்கள் அரசின் மானிய விலையில் வழங்கப்பட்டு உள்ளது.. தொடர்ந்து பல திட்டங்களை மீனவர்களின் நலனுக்காக அரசு செயல்படுத்தும். மீனவர்களின் கோரிக்கைப்படி, கூடிய சீக்கிரம் மீனவர்களுக்கென தனி வங்கி உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பட்ஜெட் தொடர்
இதுதான் மீனவர் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.. கனிமொழியின் இந்த அறிவிப்பு விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் நம்பப்படுகிறது.. எப்படியும் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க போகிறது.. இந்த கூட்டத்தொடரில், டீசல் மானியம் மீனவர்களுக்கான தடைக்கால நிவாரண தொகை ரூ 8,000 ஆக உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புகளும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...!












Click it and Unblock the Notifications