முதலிடம்- சென்னை ஆண்கள் காலர தூக்கி விட்டுக்கோங்க.. பெண்களின் சூப்பர் லிஸ்ட்.. திருச்சியும் செம்ம
இந்தியாவிலேயே அதிக பெண்கள் விரும்பும் நகரமாக சென்னை உள்ளது .
சென்னை: இந்தியாவிலேயே அதிக பெண்கள் விரும்பும் நகரமாக சென்னை உள்ளது . நாட்டின் முதல் 25 நகரங்களில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது.
அவதார் என்ற தனியார் நிறுவனம் அவதார் வியூபோர்ட் 2022 என்ற பெயரில் இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பட்டியல் எப்படி தயாரிக்கப்பட்டது.. தொழில்துறை , சமூக சமநிலை, பாதுகாப்பு அம்சம், உட்கட்டமைப்பு போன்றவற்றை ஆராய்ந்து அதன் மதிப்பெண்களின் அடிப்படையில் இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் என அவதார் என்ற தனியார் நிறுவனம் நாடு முழுவதும் கருத்து கேட்டது.

சிறந்த நகரங்கள்
பெண்களின் திறமைகளைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையான புரிதல்கள் என்ன என்பதையும் வகைப்படுத்தி இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் (TCWI) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு விரும்பும் இந்தியாவின் டாப் 25 நகரங்கள் எதை என்பதை இரண்டு பிரிவாக வெளியிட்டுள்ளது. 10 லட்சம் அல்லது அதற்கு மேல், மக்கள் வாழும் மெட்ரோ நகரங்களில் ஒரு வரிசையாகவும் , ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகை உள்ள சிறிய நகரங்களை இரண்டாவது வரிசையாகவும் வகைப்படுத்தி பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஆய்வு எப்படி
இந்த ஆய்வானது பிராந்தியங்களில் உள்ள 111 நகரங்களை சேர்ந்த 783 பெண்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் அடிப்படையில் சமூக மற்றும் தொழில்துறை சேர்க்கையின் வெவ்வேறு அளவுகள் மூலம் ஆய்வு செய்துள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் பட்டியலில் முதல் 10 நகரங்கள் தென்னிந்தியாவை சேர்ந்தவை ஆகும்.

பிடித்த நகரம்
நாடு முழுவதும் உள்ள பெண்கள் தங்களுக்கு பிடித்த நகரமாக சென்னையை தேர்வு செய்து உள்ளனர். இந்த பட்டியலில் சென்னை தான் முதலிடத்தில் உள்ளது. சென்னை நகரம் பெண்களுக்கான வசதிகளை வழங்கும் மதிப்பீட்டில் 78.41 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. அதற்கு அடுத்து, பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

திருச்சி நகரம்
இதனிடையே ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களை கொண்ட இரண்டாவது பிரிவில், முதல் 10 இடங்களில் திருச்சிராப்பள்ளி 71.61. மதிப்பெண்கள் பெற்று முதலிடத்திலும், வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், புதுச்சேரி, மங்களூரு, திருவனந்தபுரம், பெலகாவி ஆகிய அடுத்தடுத்த இடங்களும் பட்டியலில் பெற்று உள்ளன.
பெண்களுக்கு பாதுகாப்பான அதே சமயம் வாய்ப்புகள் அளிக்கும் இடங்கள் எது என்பது எந்த பிராந்தியம் என்பதை ஆராய்வதற்காக நாட்டின் பிராந்தியத்தின்(region) சராசரி மதிப்பெண்களையும் ஒப்பிடும் போது, தெற்கு மண்டலம் சராசரியாக 46.17 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து மேற்குப் பகுதி 41.13 மதிப்பெண்களைப் பெற்று இருக்கின்றன.
நகரங்களை உள்ளடக்கிய மாநில சராசரியில் கேரளா முதலிடம் பிடித்திருந்தது. இதேபோல்,அதிக சராசரியுடன் முதல் ஐந்து மாநிலங்களில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று தென் மாநிலங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக இரண்டு பிரிவுகளிலும் இந்தியாவில் பெண்களுக்கான முதல் 10 சிறந்த நகரங்களில் எட்டு தமிழ்நாட்டு நகரங்கள் இடம் பெற்றுள்ளது சிறப்பு அம்சமாகும்.
இந்த பட்டியலில் நாட்டின் தலைநகரான டெல்லி 41.36 மதிப்பெண்களுடன் 14 வது இடத்தைப் பிடித்துள்ளது. பெண்களுக்கான முதல் 10 நகரங்களில் தேசிய தலைநகர் இடம்பெறாதது ஆச்சரியமல்ல என்று கணக்கெடுப்பு அறிக்கை குறிப்பிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தலைநகரத்தில் அதிகம் பதிவு செய்யப்பட்டு வருவதைத் தான் இந்த பட்டியல் வெளிப்படையாக காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிரிவுகளிலும் முதல் 25 இடங்களுக்குள் பல மாநிலங்களின் தலைநகரங்கள் இடம்பெறவில்லை. முதல் 25 இடங்களில் இடம்பெற்றுள்ள மாநில/யூனியன் பிரதேச தலைநகரங்கள் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, கேரளா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்தவை.

அவதார் நிறுவனத்தின் நிறுவனர் சவுந்தர்யா ராஜேஷ் கூறுகையில்,
"வரலாற்று ரீதியாக, வட மாநிலங்கள் தொடர்ந்து போர் மற்றும் பல்வேறு அரசாங்க சண்டைகளுக்கு உட்பட்டிருந்தது இந்த நகரங்களில் வசிப்பவர்களுக்கு உயிர்வாழ்வதற்கான தொடர்ச்சியான போராட்டம் இருந்தது. தென் மாநிலங்கள் ஒப்பீட்டளவில் அமைதியானவை. அங்கன்வாடிகள் போன்ற குழந்தை பராமரிப்பு அமைப்புகள், வேலை செய்யும் தாய்மார்களுக்கான ஆதரவு அமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது சோழர் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனால் தான் தெற்கு பகுதி நகரங்கள் பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்றார்.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications