நார்த் எதுக்கு? சென்னையை 'டிக்' அடித்த மத்திய அரசு! பறக்க தயாராகும் ஸ்ரீபெரும்புதூர்
சென்னை: சென்னையையடுத்த ஸ்ரீபெரும்புதூரில் ஆளில்லா விமான பயிற்சிக்கான சோதனை மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இதுபோன்ற பயிற்சிக்கான சோதனை மையம் அமைக்கப்படவில்லை. முதன் முறையாக தமிழ்நாட்டில் அமைய இருக்கிறது.
சர்வதேச நாடுகள், போர் விமானங்களை வாங்குவதை விடவும் ட்ரோன்களை வாங்குவதற்கும், அதை புதிய டிசைனில் வடிவமைப்பதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. போர் விமானங்கள் செய்வதை விட நுட்பமான பணிகளை இந்த ட்ரோன்கள் செய்வதால் இப்படி அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உளவு, தாக்குதல், தேடுதல், டெலிவரி என அனைத்திற்கும் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதை மேம்படுத்திட இந்திய ராணுவம் தொடர்ந்து முயன்று வருகிறது.

அப்படி உருவாக்கப்பட்டதுதான் ஆளில்லா விமானங்கள். இந்த வகை விமானங்களை ரேடாரில் அடையாளம் காண்பது கடினம். எனவே உளவுக்கும் தாக்குதலுக்கும் இதை விட நல்ல ஆயுதம் வேறு எதுவும் கிடையாது. இந்தியாவை பொறுத்த அளவில் தொடக்கத்தில் வெளிநாடுகளின் உதவியோடு ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது நிலைமை மாறியிருக்கிறது. உள்நாட்டிலேயே இதனை உற்பத்தி செய்ய தொடங்கியிருக்கிறோம்.
எனவே இந்த ஆளில்ல விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதற்கேற்றாற்போல் இதை இயக்குபவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. எனவே இதற்காக பயிற்சி சோதனை மையம் அமைக்க இடம் தேடப்பட்டு வந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் வடகலில் சோதனை மையத்தை அமைக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 5 ஏக்கர் நிலத்தில் சோதனை மையத்தை அமைக்கலாம் என தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துடன் (டிட்கோ) இணைந்து கெல்ட்ரான் தலைமையிலான கூட்டமைப்பு இதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பித்தது.
இதனையடுத்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ரூ.50 கோடியில் இந்த மையத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை கட்டுப்பாட்டில் இந்த சோதனை மையம் அமைக்கப்படுகிறது. ட்ரோன்கள்தான் எதிர்கால நவீன போர் கருவிகள் என்கிற சூழலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆளில்லா விமான பயிற்சிக்கான சோதனை மையம் அமைய இருப்பது பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
உலகின் மிகப்பெரிய ராணுவ பலத்தை கொண்டிருக்கும் ரஷ்யாவால் கூட, மிகச்சிறிய நாடான உக்ரைனின் ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை. அப்படியெனில் ட்ரோன் மற்றும், ஆளில்லா விமானங்களின் பலம் என்னவென்று இதிலிருந்து நம்மால் புரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications