சென்னைக்கு பெரிய ஆபத்து.. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நடந்த சம்பவம்! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
சென்னை: வங்கக்கடல் ஓரத்தில் இருக்கும் சென்னைக்கு, என்றைக்குமே ஆபத்து கடலில் இருந்துதான் வரும். அந்த வகையில், சென்னையிலிருந்து பல ஆயிரம் மைல் தொலைவுக்கு அப்பால் நடந்த சம்பவம் ஒன்று, சென்னை மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ரொம்பவே உஷாரா இருக்கனும் என விஞ்ஞானிகள் இந்த பிரச்சனை குறித்து எச்சரிக்க தொடங்கியுள்ளனர். சென்னை மட்டுமல்லாது, தமிழக கடலோர நகரங்கள் அனைத்தும் ஆபத்தில் இருப்பதாக வார்னிங் கொடுத்திருக்கிறார்கள்.

என்ன நடந்தது?
இன்று காலை, வெள்ளை அங்கி அணிந்துக்கொண்டு விஞ்ஞானிகள் தங்கள் சோலியை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது தெற்கு திசையிருந்து எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. தெற்கில் நடப்பது எல்லாம், வடக்கில் உள்ளவர்களுக்கு ஏன் இவ்வளவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்பது தெரியவில்லை. சரி விஷயத்துக்கு வருவோம்.
பனி பாறை உருகியது
கடந்த 1986ல் செர்னோபில் அணு உலை விபத்து நடந்தது. அந்த ஆண்டு, அண்டார்டிகாவின் 'ஃபில்ச்னர்' (Filchner) பனி அடுக்குகளில் இருந்து பெரிய பனி பாறை ஒன்று உடைந்த விழுந்தது. சுமார் 2 கன்னியாகுமரி மாவடத்தின் சைஸ் கொண்ட இந்த பனிப்பாறையை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்தனர். கடந்த 30 ஆண்டுகளாக மிதந்து வந்த இந்த பாறை, தற்போது முழுமையாக கரைந்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக இந்த பனி பாறை கடல் சேற்றில் சிக்கியிருந்தது. ஆனால், 2020ல் மெல்ல நகர தொடங்கியது. இப்போது முழுமையாக கரைந்துள்ளது. 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் கூட இது ஒரு பிரம்மாண்டமான கோட்டையைப் போல காட்சியளித்தது. ஆனால், கடந்த ஓராண்டில் இது சந்தித்த மாற்றங்கள் விஞ்ஞானிகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதிவேக உருக்கம்: வெப்பமான கடல் நீரோட்டத்தினால் இதன் அடிப்பகுதியும் பக்கவாட்டுகளும் அரிக்கப்பட்டு, கடந்த ஓராண்டில் மட்டும் தனது அளவில் பெரும் பகுதியை இழந்துவிட்டது.
சுழலில் சிக்கிய அதிசயம்: 2025 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், கடலுக்கு அடியில் உள்ள ஒரு மலை போன்ற பகுதியின் மேல் சிக்கிக்கொண்டது. அங்கு நீரோட்டத்தால் உருவான ஒரு 'சுழல் தூணில்' (Rotating column) சிக்கி சில வாரங்கள் சுழன்றது. இந்த விசை ஏற்கனவே பலவீனமாக இருந்த பனிப்பாறையைத் துண்டு துண்டாக உடைக்க உதவியது.
வாழ்நாளின் கடைசி பகுதி
தற்போது A23a தனது வாழ்நாளின் கடைசி சில வாரங்களில் உள்ளது. இது பல துண்டுகளாக உடைந்துவிட்டதால், அவற்றுக்கு A23g, A23h, A23i எனப் புதிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அண்டார்டிகாவின் கடும் குளிரைத் தாண்டி வெப்பமான கடல் பகுதிக்கு வந்துவிட்டதால், இது இன்னும் சில வாரங்களில் முற்றிலும் கரைந்து மறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு டேஞ்சர்
சரி அதுபாட்டுக்கு கரைந்தால், கரைஞ்சிட்டு போகட்டுமே.. அதுக்கும் சென்னைக்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறீர்களா! சம்பந்தம் இருக்கு. பனிபாறைகள் கரைவதால் கடல் நீர் மட்டம் அதிகரிக்கும். இப்படியோ எல்லா பாறைகளும் கரைந்துவிட்டால், சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்று வெள்ளை அங்கி அணிந்த விஞ்ஞானிகள் வார்னிங் கொடுத்திருக்கிறார்கள். எனவே சென்னை மக்கள் இனி உஷாரா இருக்கனும்.
-
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்.. சென்னை, தாம்பரத்தில் 40 டி.எஸ்.பி-க்கள் டிரான்ஸ்பர்! -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது?












Click it and Unblock the Notifications