சென்னை பல்லாவரம் மக்களுக்கு விடிவு காலம் பிறக்குது.. பம்மல், குன்றத்தூருக்கு மிகப்பெரிய குட்நியூஸ்
சென்னை: சென்னை பல்லாவரம் மேம்பாலத்தின் கீழ் உள்ள ஜிஎஸ்டி சாலை மிகவும் குறுகியதாக இருக்கும். இந்த சாலையை 500 மீட்டர் நீளத்திற்கு அகலப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நீண்டகாலமாக உள்ளது. பல்வேறு தடைகளை தாண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மூன்று வழிச் சாலையாக 500 மீட்டர் நீளத்திற்கு அதிகரித்தால் , சென்னையின் தென்மேற்கே உள்ள பம்மல், அனகாபுத்தூர் மற்றும் குன்றத்தூர் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகளின் போக்குவரத்து நெரிசல் இன்றி எளிதாக பயணிப்பார்கள்.
மொத்த சென்னைக்கும் தாம்பரம் - கிண்டி இடையிலான ஜிஎஸ்டி சாலை மிகவும் முக்கிய வழித்தடமாக இருக்கிறது. தாம்பரத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னையில் இருந்து தாம்பரம், புறநகர் பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களுக்கும் செல்வதற்கு லட்சக்கணக்கான வாகனங்கள் ஜிஎஸ்டி சாலை முக்கியமானது.

தாம்பரம் முதல் கிண்டி வரை உள்ள சாலையில் மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, சானடோரியம் உள்ளிட்ட சந்திப்புகளில் பொதுவாகவே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மாலை நேரங்களில் மிக மோசமான நெரிசல் ஏற்படும். விடுமுறை நாட்களில் ஊருக்கு போய், ஊர் திரும்புவதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிடும்.. அவ்வளவு நெரிசலான பகுதியாகும். அவசரத்திற்கு போக வேண்டும் என்றால் ரயிலில் தான் போக வேண்டும் என்கிற அளவில் நெரிசல் ஏற்படும்.
இந்த நெரிசல்களை தவிர்ப்பதற்காகவே குரோம்பேட்டை, துரைப்பாக்கம் ரேடியல் சாலை - ஜிஎஸ்டி சாலை சந்திப்பு மற்றும் விமான நிலையம் முன்பாக மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதனால், போக்குவரத்து நெரிசல் சற்றே குறைந்தது. ஆனாலும் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை - குன்றத்தூர் சாலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதவிர, பல்லாவரம் சந்தை நடைபெறும் நாளில் வாகன நெருக்கடி அதிகமாக இருந்தது.
எனவே இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், குன்றத்தூர் சாலை, பல்லாவரம் சந்தை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் ஜிஎஸ்டி சாலையில் 1.5 கிமீ தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. 2016ல் தொடங்கப்பட்டு இப்பணிகள் 2020ல் முடிந்து பாலம் திறக்கப்பட்டது. பல்லாவரம் மேம்பாலம் முதலில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு எளிதாக செல்லும் வகையில் அகலமான மேம்பாலமாக அமைக்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சவால்கள் காரணமாக பாலம் ஒருவழிப்பாதையாக அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனால், கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் இலகுவாக சென்று வந்தன. ஆனால், கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் வாகனங்கள் மீண்டும் பல்லாவரத்தில் நெரிசலில் சிக்கி பரிதவித்தன. இதையடுத்து, பாலத்தை இருவழிப்பாதையாக மாற்ற உத்தரவிடப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் இரு மார்க்கமும் வாகனங்கள் செல்லும் வகையில் மாற்றப்பட்டது. ஆனால், தற்போது காலை மற்றும் மாலை நேரங்களில் மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கிறது.
குறிப்பாக, அந்த பாலத்துக்கு கீழ் உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசலில் திணறுகின்றன. கிண்டியில் இருந்து செல்லும் வாகனங்கள் பல்லாவரம் புதிய பாலத்தின் கீழ் பகுதி சாலையில் செல்லும்போது நெரிசலில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. . அதேபோல் திருநீர்மலை சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அங்குள்ள பாலத்தின் அணுகு சாலையில் சென்று, பல்லாவரம் புதிய சாலையின் கீழ் திரும்பி, மீண்டும் குரோம்பேட்டை நோக்கி செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், இருசக்கர, 4 சக்கர வாகன ஓட்டிகள், அங்கு அமைத்துள்ள சாலை தடுப்புகளை கடந்து எதிர்திசையில் வந்து பாலத்தின் கீழேயே சாலையில் செல்வது தொடர்கிறது. இதனால் பம்மல், அனகாபுத்தூர் மற்றும் குன்றத்தூர் புறநகர் பகுதி மக்கள் சிக்கலை சந்தித்து வருகிறார்கள். இதை தவிர்க்கும் வகையில் பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களும் பாலத்தின் கீழ் இறங்க காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இந்நிலையில், பல்லாவரம் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையை 500 மீட்டர் தூரத்திற்கு மூன்று வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு தேவைப்படும் கூடுதல் நிலம் ராணுவத்திற்கு சொந்தமானது என்பதால், சாலையை அகலப்படுத்துவதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாக முடங்கியது. நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மாநில அரசு 14 கோடி செலவில் ராணுவ வீரர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்பை கட்ட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நிலத்தை விடுவிக்க ராணுவ அமைச்சகம் ஒப்புக்கொண்டது. பொதுப்பணித் துறையின் ஆதரவுடன் நெடுஞ்சாலைத் துறை இந்தத் தேவைகளை நிறைவு செய்து, நிலம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது சாலை விரிவாக்கப் பணி 1.16 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. வரும் பிப்வரி மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி சாலை அகலப்படுத்தப்பட்டால், மேம்பாலத்தின் கீழ், போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். விரிவாக்க பணிகளுக்காக மேம்பாலத்தை ஒரு வழியாக மாற்றுவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்கள்.
ஜிஎஸ்டி சாலையை பம்மல் மற்றும் குன்றத்தூருடன் இணைக்கும் பல்லாவரம் சந்திப்பில் உள்ள இரண்டு முக்கிய சிக்னல்களும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும். அதேநேரம் இந்த இணைப்புச் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் நிரந்தரமாக தீர்வு ஏற்படும்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications