சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொடுமை.. அவசரமாக சென்னையில் இறங்கிய மலேசிய விமானம்.. உள்ளே ஒரு பெண்.. விசாரித்து பார்த்தால் "சோகம்"!

Google Oneindia Tamil News

சென்னை: துருக்கியில் இருந்து மலேசியாவிற்கு செல்ல வேண்டிய விமானம் ஒன்று இன்று அவசர அவசரமாக சென்னையில் தரையிறங்கியது.

ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் விமானங்கள் பொதுவாக.. பல்வேறு காரணங்களுக்காக அவசரமாக தரையிறக்கப்படும். விமானத்தில் கோளாறு இருந்தால் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்படும்.

அதேபோல் விமானத்தில் வேறு விதமான பிரச்சனைகள் இருந்தாலும் தரையிறக்கப்படும். வானிலை காரணமாகவும் விமானங்கள் வேறு விமான நிலையங்களில் தரையிறக்கப்படுவது வழக்கம்.

அதேபோல் விமானத்தில் நோயாளிகள் இருக்கும் பட்சத்தில் மெடிக்கல் எமர்ஜென்சி காரணமாக விமானம் வேறு விமான நிலையங்களுக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

 ரூ.4 லட்சம் வரதட்சணைக்காக இளம்பெண்ணை உயிருடன் எரித்த குடும்பம்.. மயிலாடுதுறையில் பயங்கரம் ரூ.4 லட்சம் வரதட்சணைக்காக இளம்பெண்ணை உயிருடன் எரித்த குடும்பம்.. மயிலாடுதுறையில் பயங்கரம்

மலேசிய விமானம்

மலேசிய விமானம்

அந்த வகையில்தான் இன்று மலேசியா செல்ல வேண்டிய விமானம் சென்னையில் தரையிறங்கியது. துருக்கியில் மலேசியாவிற்கு துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் TK60 சென்றது. இந்த விமானம் சென்னைக்கு மேலே பறந்து கொண்டு இருந்த போது, விமானத்தில் இருந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த விமானத்தில் 326 பேர் இருந்துள்ளனர். திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

பிரசவம்

பிரசவம்

அவருக்கு பிரசவ வலி ஏற்பட வேண்டியதற்கான மாதம் இது இல்லை என்றாலும் விமானத்தில் ஏறிய சில நிமிடங்களில் அவருக்கு வலி ஏற்பட்டுள்ளது. விமானத்திற்கு உள்ளே இருந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க முயன்று உள்ளனர். ஆனாலும் முடியவில்லை. இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தனர். துருக்கியில் இருந்து மலேசியாவிற்கு 326 பயணிகளுடன் சென்று அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தரையிறக்கம்

தரையிறக்கம்

விமானம் இறங்கியதும் அந்த பெண்மணியை வெளியே கொண்டு வருவது சிரமம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் மருத்துவக்குழுவை அனுப்ப முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி மருத்துவக்குழு உள்ளே சென்று பரிசோதனை செய்தது. அப்போது அந்த பெண்ணுக்கு சரியாக குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தையை சோதித்ததில்.. குழந்தை குறை மாதத்தில் இறந்தே பிறந்துள்ளது. அவசர சிகிச்சை கொடுத்தும் குழந்தையை காக்க முடியவில்லை.

என்ன ஆனது?

என்ன ஆனது?

அந்த பெண்ணுக்கு உடனே அவசர மருத்துவ விசா வழங்கப்பட்டது. அந்த பெண்ணுடன் வந்தவருக்கு அவசர விசா வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் , இறந்த சிசுவை விமானத்தில் இருந்து கீழே இறக்க அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. சில சட்ட சிக்கல்கள் காரணமாக சிசுவை கீழே இறக்க மறுத்துவிட்டனர். இதனால் இறந்த சிசு விமானத்தில் பாதுகாப்பாக மலேசியாவிற்கு எடுத்து செல்லப்பட்டது. இது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,

English summary
A Turkey flight bound to Malaysia did an emergency landing in Chennai for a pregnant lady. துருக்கியில் இருந்து மலேசியாவிற்கு செல்ல வேண்டிய விமானம் ஒன்று இன்று அவசர அவசரமாக சென்னையில் தரையிறங்கியது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X