தங்க நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லைனு சொல்றாங்க! ஏமாந்துவிடுவீங்க! இந்த வீடியோ பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்க நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை, என கூறும் நகைக் கடைக்காரர்கள், அந்த விளம்பரத்தை நம்பும் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை பாருங்கள் என ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

இதுகுறித்து இன்பா என்பவரின் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: *நகை தொழில் செய்யும் ஆசாரி ஒருவர் நகை செய்யும் பித்தலாட்டத்தை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார்*

gold budget 2024 2024

நகை வியாபாரிகள் செய்கூலி இல்லை சேதாரம் இல்லை என்று விளம்பரப்படுத்தி நகைகளை விற்று வருகின்ற இந்த நகை விளம்பரத்தில் பொதுமக்கள் நம்பி நகையை வாங்கி வருகின்றனர் இதில் என்ன தவறு செய்கிறோம் என்று நகை ஆசாரி ஒருவர் நகையை உடைத்து அதில் இருக்கும் உண்மையை விளக்கி கூறியுள்ளார்.

இதில் ஒரு வீடியோவையும் அவர் இணைத்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு பழைய மோதிரத்தை ஆச்சாரி ஒருவர் உடைத்து காட்டினார். அதில் முழு தங்கம் இல்லை. ஏதோ கல் போன்ற மாவை போட்டு மோதிரத்தை செய்து அதன் மேல் தங்கத்தை வைத்து பற்ற வைத்துள்ளார். இதனால் எடை கூடும். ஆனால் இவர்கள் பயன்படுத்திய தங்கத்தின் அளவு குறைவாக இருக்கும்.

இப்படித்தான் செய்கூலி, சேதாரம் இல்லை என கூறி ஏமாற்றுகிறார்கள். இதை யாரும் நம்பி ஏமாறாதீர்கள். அது போல் செய்கூலி, சேதாரம் குறைவு என கூறினாலும் யாரும் வாங்காதீர்கள். அந்த நகைகளில் கூட இப்படியொரு நூதன மோசடி இருக்க வாய்ப்புகள் உண்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தங்கம் விலை நம் பாட்டி காலத்தில் ஒரு ரூபாய், 2 ரூபாய்க்கு விற்றிருக்கலாம், நம் அம்மாக்கள் காலத்தில் ரூ 100, 200, நம் காலத்தில் 1990 களில் சவரன் ரூ 2000 க்கு விற்பனையானது. 2000 களில் சவரன் விலை 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ 50 ஆயிரம் வரை விற்பனையானது.

பணத்தை தங்கத்தின் மீதும் நிலத்தின் மீதும் போட்டால் அதன் மதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்பதால்தான் எத்தனை ஆயிரத்திற்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டாலும் மக்கள் அதை வாங்குகிறார்கள்.

2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலானது. அப்போது தங்கத்தின் மீதான சுங்க வரி 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பால் தங்க நகை விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் நேற்று காலை ஒரு கிராம் 6,810 க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ 260 குறைந்து ரூ 6,550 க்கு விற்பனையானது. மேலும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 2,080 குறைந்து ரூ 52,400 க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் விலை மேலும் குறையும் என்கிறார்கள். இதனால் சாமானிய மக்களும் தங்கம் வாங்கும் நிலை ஏற்படும். ஒரு சவரனுக்கு ரூ 2100 குறைப்பு என்பது மிகச் சிறந்த விலை குறைப்பாகும். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறையாவிட்டாலும் இந்திய அரசு பட்ஜெட்டின் மூலம் குறைத்துள்ளது.

இப்படி தங்கம் விலையும் குறையும் சூழலில் இனி செய்கூலி, சேதாரம் குறித்து எந்த பொய் விளம்பரங்களையும் நம்பாமல் உண்மையான தங்க நகைகளை வாங்கி பயனடையுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+