காந்தியா ? அம்பேத்கரா? தெறிக்கவிட்ட ஸ்ரீதேவி மகள்! வைரலாகும் வீடியோ! ஜான்வி கபூர் செய்த சம்பவம்
சென்னை: நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் பாலிவுட் திரையுலகில் மிகப் பிரபலமான நடிகை. அவர் இந்தி யூடியூப் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் ஜான்வி கபூர் வழக்கமான நடிகையைப் போல் பதில் அளிக்கவில்லை. அட! நம்ம ஊர் ஸ்ரீதேவி பொண்ணா இவர்? இவ்வளவு புத்திசாலியாகப் பேசுகிறாரே என்று வியக்க வைத்துள்ளது.
அந்தப் பேட்டில் நேரடியாக இருவர் சேர்ந்து விவாதிக்க வேண்டும் என்று என நீங்கள் விரும்பு நபர்கள் யார் என்று கேள்வியை முன்வைக்கிறார்.
அதற்கு ஜான்வி, கொஞ்சம் ராகம் இழுத்துவிட்டு அவர் சொன்ன பதில்தான் செம! ஆகவேதான் இன்றைக்கு அந்தப் பேட்டி இந்தி பெல்ட் தாண்டி தமிழ்நாட்டுக்கு வந்து எட்டிப்பார்த்துள்ளது.
அப்படி அதில் அவர் என்னதான் பதில் சொன்னார்? எந்தத் தலைவர்கள் சந்தித்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு அவர், "உண்மையைச் சொல்லட்டுமா" என்று கேட்கிறார்.
ஆமாம் சொல்லுங்கள் என்கிறார் தொகுப்பாளர்.

அதற்கு ஜான்வி, "அம்பேத்கரும் காந்தியும் சேர்ந்து விவாதித்தால் நன்றாக இருக்கும்" என்று பதில் சொல்கிறார்.
அந்தப் பதிலை அந்தத் தொகுப்பாளர் எதிர்பார்க்கவே இல்லை. அவரும் அதை வெளிப்படையாகச் சொல்லவே செய்கிறார். உடனே பத்திரிகையாளர் இல்லையா? காரசாரமாக அவரது வாயைப் பிடுங்க வேண்டும் என்பதற்காக 'புனா ஒப்பந்தம் பற்றி விவாதிக்க வேண்டுமா?' என்று கொக்கி போடுகிறார்.
அதற்கு ஜான்வி, "அம்பேத்கரின் பார்வை எப்படி காந்தியின் கருத்துகளிலிருந்து வேறுபட்டது? இருவரும் மற்றவர்களை அதிகம் பாதித்த தலைவர்கள். நிறைய உதவிகளை அடுத்தவர்களுக்குச் செய்துள்ளனர். இந்த நாட்டுக்கு அவர்கள் நிறைய உதவியுள்ளார்கள். நான் நினைக்கிறேன், இந்த இருவரின் உரையாடல் நன்றாக இருக்கும் என்று" என்கிறார்.
அதைக் கேட்ட தொகுப்பாளர், இந்தப் பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. நான் உண்மையில் எனக்கு இது மிகப்பெரிய சர்ப்ரைஸ் என்கிறார்.
மேலும், நான் இதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. அது என்னுடைய தவறு என்றும் அவர் ஒப்புக் கொள்கிறார்.
இன்றைக்குக் கூட சமூக அறிவியல் பற்றிப் படிப்பவர்கள் அல்லது பள்ளிக்கல்வியில் இது சூட்டைக் கிளப்பும் விவாதமாக இருந்து வருகிறது. தலித் மக்களை நாம் எப்படி அரவணைப்பது? பள்ளிகளில் உள்ள தீண்டாமையை எப்படி ஒழிப்பது என்பது எல்லாம் மிகப் பெரிய பிரச்சினைகளாக உள்ளன.

இந்த விசயத்தில் அம்பேத்கர் பார்வை வேறு. காந்தியின் பார்வை வேறு. இரண்டுமே இரு திசைகளில் உள்ளன.
அதற்கு ஜான்வி, "ஆரம்பத்திலிருந்தே அம்பேத்கர் மிக தீவிரமாக இருந்தார். அவரது போராட்டம் மிக முக்கியமானது. காந்தியும் இந்தச் சமுகத்தில் ஜாதி எப்படி உள்ளது என்பது பற்றி பேசி இருக்கிறார்" என்கிறார்.
அவரிடம் உங்கள் பள்ளியில் தீண்டாமையை இருந்ததா? அதை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
"இல்லை, எனது பள்ளியில் தீண்டாமை என்பதை நான் பார்க்கவில்லை. எனது வீட்டில் கூட ஜாதியைப் பற்றி நாங்கள் பேசியதில்லை.
எனது அப்பா முன்பு டிப்பிக்கல் நார்த் இண்டியன் ஃபாதர் ஆக இருந்தார். இப்போது அவர் நண்பரைப் போல் இருக்கிறார். அவரிடம் இப்போது இந்த மாற்றம் உள்ளது" என்று பேசி இருக்கிறார்.
அதன்பின்னர் அந்த யூடியூப் நபர்கள் எல்லாம் அவரிடம் கூட்டாகச் சேர்ந்து கேள்வி கேட்கிறார்கள். அதில் ஒருவர், இன்றைக்கு அரசியல் தலைவர்கள் எதைப் பேசினாலும் ட்ரோல் செய்கிறார்கள். உங்களுக்குப் பிடித்த தலைவர் யார் என்று கேட்டார்.
அதற்கு ஜான்வி, "நாட்டுக்கு நல்லது செய்யும் எந்தத் தலைவரையும் நான் விரும்புகிறேன்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications