சென்னையில் விசாரணைக்கு சென்று வீடு திரும்பிய ரவுடி திடீர் பலி.. உறவினர்கள் ஷாக்.. என்ன நடந்தது?
சென்னை: போலீஸ் விசாரணைக்கு சென்று வீடு திரும்பிய இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மீது உயிரிழந்தவரின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
சமீப காலங்களாக காவல் நிலைய மரணங்கள் சலசலப்பை உருவாக்கி வருகிறது. சென்னை கொடுங்கையூரில் கடந்த ஆண்டு விசாரணை கைதி ஒருவர் விசாரிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் காவல்துறையினர் மீது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது. இந்நிலையில், இரவு நேரங்களில் விசாரணை கைதிகளை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், சென்னை எம்ஜிஆர் நகரில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞர் ஒருவர், வீடு திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி, போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர்(27). இவருக்கு மஞ்சு எனும் மனைவியும், 11 மாதத்தில் கைக்குழந்தை ஒன்றும் உள்ளனர். இவர் கடந்த 4 மாதங்களாக கேகே நகரில் உள்ள பம்மல் சம்பந்தம் தெருவில் உள்ள தனது மாமியார் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இவர் மீது ஏற்கெனவே அடிதடி, கொலை முயற்சி என ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் 9 கேஸ்கள் பென்டிங் இருக்கின்றன. அப்பகுதியில் இவர் ஓர் ரவுடியாகவே வலம் வந்திருக்கிறார்.
அதேபோல இவரது தம்பி மீதும் 18 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில், கடந்த 9ம் தேதியன்று கேகே நகரில் ஸ்ரீதர் வசித்து வந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஒன்றரை சவரன் நகை திருடு போயுள்ளது. சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், விசாரணைக்காக பக்கத்து வீட்டு ஸ்ரீதரை அழைத்து சென்றனர்.
விசாரணையின்போது திடீரென அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. எனவே அடுத்த நாள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அறிவுறுத்தி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இதனையடுத்து ஸ்ரீதர் நேற்று மதியம் தனது மனைவியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறார். அப்போது அவருடைய கைரேகையை பதிவு செய்து போலீசார் விசாரித்துள்ளனர். அப்போதும் ஸ்ரீதருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது.

எனவே அவரை அவரது மனைவியுடன் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் அவருக்கு ஊசி போடப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் நெஞ்சு எரிச்சல் குறையவில்லை. எனவே உப்பு நீர் கரைசலை உறவினர்கள் கொடுத்திருக்கிறார்கள். இதை குடித்தவுடன் ஸ்ரீதர் வாந்தி எடுத்திருக்கிறார். எனவே பதற்றமடைந்த உறவினர்கள் மீண்டும் கே.கே.நகர் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு ஸ்ரீதரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதை எதிர்பாராத ஸ்ரீதரின் உறவினர்கள் அவருடைய மரணத்திற்கு போலீசார்தான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர். காவல் நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதால்தான் அவர் உயிரிழந்துள்ளதாக அவருடைய மனைவி மஞ்சு புகார் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், காவல்துறை தரப்பில் தவறு இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்! -
ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. நகைகளுடன் 2 பேர் கைது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications