ஆதார் கார்டு போதும்.. ரூ.2 லட்சம் வரை கிடைக்கும்.. பெர்சனல் லோன் வாங்குவது எப்படி? இதோ விவரம்
சென்னை: அவசர தேவைக்காக திடீரென பணம் தேவைப்பட்டால் தனிநபர் கடன்கள் பலரும் வாங்குவதை பார்க்க முடிகிறது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன்களை பெற சில நேரங்களில் அதிகப்படியான ஆவணங்கள் தேவைப்படுகிறது. இது எதுவுமே இன்றி ஆதார் கார்டு வைத்தே தனிநபர் கடன்கள் பெற வாய்ப்புள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
ஆதார் கார்டு என்பது தற்போது தவிர்க்க முடியாத ஆவணமாக உள்ளது. இந்திய குடிமக்கள் அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டும் என்றால் ஆதார் அட்டை அவசியம் கேட்கப்படுகிறது. வங்கி கணக்கு துவங்குவது முதல் செல்போன் எண்கள் பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டையே தற்போது கேட்கப்படுகிறது.

வங்கி, நிதி நிறுவனங்களில் கடன் வாங்க சென்றால் கூட முகவரி உள்ளிட்ட அடையாள ஆவணங்களை உறுதி செய்ய ஆதார் விவரங்களே கேட்கப்படுகிறது. அடையாள ஆவணம் மட்டும் இன்றி ஆதார் அட்டை இருந்தாலே ரூ.2 லட்சம் வரை தனிநபர் கடன் பெற முடியுமாம். எப்படி கடன் பெற முடியும்? வட்டி உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
ஆதாரை வைத்து தனிநபர் கடன்
ஏதாவது அவசர தேவை ஏற்பட்டால் உடனடியாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் தனி நபர் கடனை பலரும் பெறுவதை பார்க்க முடிகிறது. இப்படி தனி நபர் கடன்களுக்கு தவிர்க்க முடியத டாக்குமெண்டாக இருக்கும் ஆதாரை பயன்படுத்தி ரூ. 2 லட்சம் வரை எந்த தடையும் இன்றி எளிதாக பெற முடியும். ஆதார் அட்டை மூலமாக பெறப்படும் கடன்களுக்கு எந்த வித பிணையும் தேவையில்லை.
உடனடியாக கடன் தேவைப்படுபவர்களுக்கு ஆதார் கார்டு மூலமாக பெறப்படும் இந்த கடன் எளிதான ஒன்றாக இருக்கும். இதற்கு அதிகப்படியான ஆவண பணிகள் இல்லை. அடையாள ஆவணமாகவும் முகவரி ஆவணமாகவும் ஆதாரை பயன்படுத்தலாம். இந்த லோன்கள் டிஜிட்டல் முறையில் வழங்கப்படுகின்றன. ஆவண பணிகள் அனைத்தும் முற்றிலும் டிஜிட்டல் மயமானவை. ஒப்புதல், நிராகரித்தல் ஆகியவை என எதுவாக இருந்தாலும் விரைவாக நடைபெறும்.
கடன் பெறுவதற்கான தகுதி என்ன?
கடன் பெற விரும்புவர்கள் 21 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கடனுக்கு விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்ச மாத வருமானம் ரூ.15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை இருக்க வேண்டும். மாத சம்பளம் பெறுபவர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு இது பொருந்தும். பான் கார்டு வைத்து இருப்பது அவசியம். கடைசி 3 முதல் 6 மாதங்கள் வரையிலான வங்கி கணக்கு ஸ்டேட்மேன்ட் அவசியம். சம்பளம் பெறுபவர்கள் தங்கள் வருமானத்திற்கான ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும். சுய தொழில் செய்பவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் (ITR) விவரங்களை கொடுக்க வேண்டும்.
கிரெடிட் ஸ்கோர்:
இந்த கடன் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருக்க வேண்டும். அதாவது 650-700 க்குள் அல்லது அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோர் இருக்க வேண்டும். கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால் உங்களுக்கு எளிதாக கடன் ஒப்புதல் ஆகவும் குறைந்த வட்டியில் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
கடன் வழங்கும் வங்கிகளின் இணையதளம் அல்லது மொபைல் செயலியில் லோன் பெறுவதற்கான தகுதி உள்ளதா என பார்க்க வேண்டும். கடன் வழங்கும் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட எலிஜிபிலிட்டி கால்குலேட்டர் முலமாக நீங்கள் இதை செக் செய்ய முடியும். ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆதார் அட்டை பயன்பாட்டில் இருக்க வேண்டும். மேலும் ஆதார் அட்டை உங்களின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை:
ஆதார் கார்டு, பான் கார்டு, வருமானத்திற்கான சான்று ஆகியவற்றை அப்லோடு செய்ய வேண்டும். நீங்கள் ஆவணங்களை சமர்பித்த பிறகு உங்கள் லோன் அப்ரூவ் ஆகிவிடும். நிராகரிக்கப்படுவதாக இருந்தால் 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள் தெரிந்துவிடும்.
வட்டி எவ்வளவு?:
தனிநபர் கடன்கள் என்பது பாதுகாப்பற்றவை (unsecured). எனவே, கிரெடிட் ஸ்கோர், வருமானம், கிரெடிட் வரலாறு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்படும். எனவே, கடன் பெறுவதற்கு முன்னால் வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications