ஆதார் கார்டு வச்சிருக்கீங்களா? திடீரென முடக்கப்பட்ட பழைய ஆப்.. உடனே இந்த புதிய ஆப்பிற்கு மாறுங்கள்
சென்னை: மொபைலில் இருந்த பழைய ஆதார் ஆப் திடீர்னு வேலை செய்யாமல் போகலாம்.. UIDAI வெளியிட்ட புதிய அறிவிப்பால் கோடிக்கணக்கான பயனர்கள் உடனே புதிய ஆப்பிற்கு மாற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.. இந்த புதிய ஆதார் ஆப்பில் என்னென்ன வசதிகள் உள்ளன, அதற்கு எப்படி மாறுவது என்று தெரியுமா? இதுகுறித்த முழுமையான விபரங்களை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் UIDAI அதாவது மத்திய அரசின் தனித்துவ அடையாள ஆணையம் வழங்கும் 12 இலக்க தனித்துவமான அடையாள எண்தான் ஆதார்.. பெயர், பிறந்த தேதி, முகவரி, பாலினம், போட்டோ, கைரேகை, கருவிழி உட்பட நிறைய தகவல்களை கொண்டு ஒரு குடியிருப்பாளரை ஆதார் Vஅடையாளம் காட்டுகிறது.

பத்திரபதிவு முதல் அரசு நலத்திட்ட உதவிகள் வரை, வங்கி முதல் டிக்கெட் பதிவு வரை எங்கே சென்றாலும் ஆதார் கட்டாயம் கேட்கப்படுகிறது.. இந்நிலையில் மக்கள் ஆதார் சேவைகளை வீட்டிலிருந்தே பெறுவதற்காக UIDAI கொண்டு வந்த ஆப்தான் mAadhaar.. ஆனால் இந்த ஆப்புக்கு மாற்றாக புதிய Aadhaar ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது..
mAadhaar நிறுத்தம் ஏன்?
பழைய mAadhaar ஆப்புக்கு மாற்றாக புதிய Aadhaar ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தனியுரிமை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் UIDAI தெரிவித்துள்ளது.. சோஷியல்மீடியாவில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ பதிவில், mAadhaar ஆப் படிப்படியாக நிறுத்தப்படலாம் என UIDAI தனது அதிகாரப்பூர்வ தகவல்களில் சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய ஆதார் ஆப் வேகமான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் மக்கள் எளிதாக பயன்படுத்துவதற்காக 13 இந்திய மொழிகளில் இந்த ஆப் கிடைக்கும் என்றும் UIDAI தெளிவுபடுத்தியுள்ளது.. இந்நிலையில்தான் இப்போதே புதிய ஆப்-க்கு மாறுவது நல்லது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்..
புதிய ஆப்பின் முக்கிய அம்சங்கள்
புதிய ஆதார் ஆப்பில் மிக முக்கியமான வசதி QR Code அடிப்படையிலான ஆதார் பகிர்வு ஆகும்.. இதன் மூலம் முழு ஆதார் நம்பரை வெளிப்படுத்தாமலேயே அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.. அங்கீகரிக்கப்பட்ட முனையங்களில் இந்த QR Code-ஐ scan செய்து சரிபார்ப்பு செய்துகொள்ளலாம்.
Selective Share எனப்படும் தேர்வு பகிர்வு வசதி மூலம் பெயர், புகைப்படம், வயது, பாலினம், முகவரி, செல்போன் நம்பர் என தேவையான தகவல்களை மட்டும் துல்லியமாக தேர்ந்தெடுத்து ஷேர் செய்யலாம்.. 18 வயது நிரம்பியுள்ளதை நிரூபிக்க வேண்டிய இடங்களில் பிறந்த தேதி அல்லது ஆதார் நம்பர் காட்டாமலேயே வயது உறுதிப்படுத்தல் டோக்கன் மூலம் சரிபார்க்கலாம் என்பது இந்த ஆப்பின் ஸ்பெஷலான அம்சமாகும்.
கூடுதல் பாதுகாப்பு ஸ்பெஷாலிட்டிகள்
அனுமதியற்றவர்கள் தகவல்களை அணுகாமல் தடுக்க கைரேகை, கண்ணின் ஐரிஸ், முக அங்கீகாரம் ஆகிய உடலமைப்பு சரிபார்ப்பு தரவுகளை பூட்டும் மற்றும் திறக்கும் வசதி புதிய ஆப்பில் உள்ளது
முக அங்கீகாரம் மற்றும் வெப்சைட் இல்லாமலேயே சரிபார்க்கும் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.. ஆதாரோடு இணைக்கப்பட்ட செல்போன் நம்பர் மற்றும் முகவரியை ஆப் மூலமே நேரடியாக மாற்றிக்கொள்ளலாம்.சுயவிவர பகுதி மூலம் ஒரே கணக்கில் குடும்பத்தில் ஐந்து பேரின் ஆதார் விவரங்களை சேர்க்கும் வசதியும் இந்த ஆப்பில் உள்ளது..
புதிய ஆப்பை எப்படி டவுன்லோடு செய்வது
கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் போய் UIDAI வெளியிட்ட "Aadhaar" என்ற ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும். ஆப்பை திறந்து ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பரை பதிவிட்டு, பின் நம்பர் அல்லது பயோமெட்ரிக் அமைத்து கொள்ள வேண்டும்.
பழைய ஆப்பில் சேமிக்கப்பட்ட QR codes அல்லது PDF ஆதார் போன்ற தகவல்கள் தானாக புதிய ஆப்பிற்கு வருமா என்பது தெளிவாக இல்லாததால், "Add Aadhaar" என்று தட்டி ஆதார் நம்பரை உள்ளிட்டு OTP மூலம் சரிபார்த்து விவரங்களை மீண்டும் பதிவு செய்வது அவசியம்.. குடும்பத்தினர் ஒவ்வொருவரின் ஆதாரையும் தனித்தனியாக சேர்க்கவும்.. புதிய ஆப்பில் எல்லாம் சரியாக அமைந்த பிறகு பழைய mAadhaar ஆப்பை நீக்கிவிடலாம்..!!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications