உங்க கிட்ட ஆதார் கார்டு இருக்குல்ல.. இதை முடிச்சிட்டீங்களா.. நாளையே கடைசி.. தவறினால் இதுதான் அபராதம்
சென்னை: இந்திய குடிமக்கள் அனைவருக்கும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய நாளையே அதாவது, ஜுன் 14ம் தேதியே, கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தவறினால், அபராதம் கட்டவேண்டியிருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நம் நாட்டிலுள்ள அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.. ஆதார் இல்லாமல் எதுவுமே இல்லை என்று இப்போது ஆகிவிட்டது.

இலவசம்: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மூலமாக மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படுகிறது... எனவே, இதில் தரப்படும் விவரங்கள் அனைத்துமே சரியானதாக இருக்க வேண்டும்... ஆதார் நிர்வாகக் குழுவான UIDAI மக்கள் தங்கள் ஆதார் விவரங்களை ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் புதுப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
இது தவிர, குழந்தைகளின் ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் இப்போது அமல்படுத்தியுள்ளது. ஆணையின்படி, குழந்தைக்கு 15 வயதாகும்போது அனைத்து பயோமெட்ரிக்ஸ் விவரங்களையும் புதுப்பிக்க வேண்டும்.
அந்தவகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்திய மக்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை நாளைக்குள் அதாவது ஜூன் 14-ம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ள அவகாசம் அளித்திருக்கிறது. வழக்கமாக, ஆதாரை புதுப்பிக்க ரூ.50 வசூலிக்கப்படும். ஆனால் ஜூன் 14 வரை, அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்துக் கொள்ளலாம்.
பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் ஆகியவற்றைப் புதுப்பிக்க மட்டுமே இலவச சேவை நடைமுறையில் இருக்கும். ஜூன் 14-ம் தேதிக்குப் பிறகு எப்போதும் போல கட்டணம் செலுத்த வேண்டி வரும். ஆனால் உங்கள் புகைப்படம், கருவிழி அல்லது பிற பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டுமானால், ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று புதுப்பித்தலுக்குத் தேவையான கட்டணத்தைச் செலுத்தவும்.
ஆதார் தொடர்பான ஆவணங்களில் எந்த தவறும் இல்லை என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும். ஆதாரை புதுப்பித்து வைத்திருப்பதன் மூலம், ஆதார் தொடர்பான சேவைகளை அரசாங்கம் மேம்படுத்தும். தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் மற்ற விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கலாம், பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும்.
இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் UIDAI நிறுவனம் myAadhaar போர்ட்டலில் வெளியிட்டிருந்தது.. மேலும் மக்கள் ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய myAadhaar பிளாட்ஃபார்மில், தரப்பட்டுள்ள கடைசி நாள் வரை இலவசமாக மாற்றங்களை செய்யலாம்..
கடைசி தேதி: ஜூன் 14-க்கு முன்புவரை ஆதார் அட்டை விவரங்களை இ-ஆதார் போர்ட்டல் வழியாக மட்டுமே இலவசமாக அப்டேட் செய்ய முடியும்.. ஆனால், ஜூன் 15ம் தேதிக்கு பிறகு, ஆதார் மையங்களுக்கு சென்றால் ரூ.50 என்கிற கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். எந்த ஆதார் மையத்திற்கு சென்றாலும் இதே கட்டணம் பொருந்தும்.
ஆன்லைனில் ஆதார் விவரங்களை அப்டேட் செய்வது எப்படி தெரியுமா?
- யுஐடிஏஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (UIDAI website) உள்ள ஆதார் சுய சேவை போர்ட்டலுக்கு (Aadhaar Self Service Portal) செல்லவும்
- உங்கள் ஆதார் எண் (Aadhaar Number), கேப்ட்சா (Captcha) மற்றும் உங்கள் மொபைலுக்கு வந்த ஒடிபி (OTP) ஆகியவற்றை பயன்படுத்தி போர்ட்டலில் லாக்-இன் செய்யவும்.
- இப்போது டாக்குமெண்ட் அப்டேட் பகுதிக்கு (Document Update section) சென்று, ஏற்கனவே உள்ள விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்.
- பிறகு ட்ராப்-டவுன் லிஸ்ட்டில் (drop-down list) இருந்து பொருத்தமான ஆவண வகையை தேர்ந்தெடுத்து, அவற்றை சரிபார்ப்பதற்காக அசல் ஆவணங்களின் (original documents) ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பதிவேற்றம் செய்யவும்
- இறுதியில், உங்களுக்கு கிடைக்கும் சேவைக்கோரிக்கை நம்பரை (Service request number) குறித்து வைத்து கொள்ளவும்.. காரணம், இந்த நம்பரை வைத்து தான், நீங்கள் விடுத்த ஆதார் அப்டேட் கோரிக்கையின் செயல்முறை எந்த படிக்கு வந்துள்ளது என்பதை உங்களால் கண்காணிக்க முடியும்.
ஆதார் அட்டையை புதுப்பிப்பது எப்படி தெரியுமா?
- UIDAI இணையதளத்தில் "ஆதாரைப் புதுப்பிக்கவும்" விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்
- அதில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் உங்கள் ஆதார் எண் இரண்டையும் உள்ளிட வேண்டும்.
- மெனுவிலிருந்து "ஓடிபி அனுப்பு" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
- உங்கள் கைப்பேசிக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ உள்ளிட வேண்டும். அதில் மெனுவிலிருந்து "உள்நுழை" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
- நீங்கள் புதுப்பிக்க விரும்பும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த ஆவணத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பதிவேற்ற வேண்டும்
- மெனுவில் "சமர்ப்பி" என்பதைத் தேர்ந்தெடுக்க, புதுப்பிப்பு கோரிக்கை நம்பரை பெறுவீர்கள்.. மேலும் உங்கள் விவரங்கள் 15 வேலை நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும்
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications