ஆதார் பயோமெட்ரிக்.. பெற்றோரின் கவலை தீரப்போகுது.. பள்ளி மாணவர்களுக்கு இந்திய அஞ்சல் துறை குட்நியூஸ்
சென்னை: "படிக்கும் பள்ளியிலேயே ஆதார்" என்ற திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளும் பணி நடந்தது. இதேபோல், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு படிக்கும் பள்ளியிலேயே முகாம் அமைத்து அஞ்சல் சேமிப்பு கணக்கு தொடங்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதனுடன் சேர்த்து ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணியினை மேற்கொள்ளப்போகிறது இந்திய அஞ்சல் துறை.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே ஆதார் பயோமெட்ரிக் என்பது தபால் நிலையங்களில் மற்றும் ஆதார் புதுப்பித்தல் மையங்களில் நடைபெறுகிறது. ஆனால் அதற்கு காலையிலேயே சென்று டோக்கன் வாங்க வேண்டும். அதிகபட்சம் ஒரு நாளைக்கு 50 பேருக்கு தான் டோக்கன் கிடைக்கும். இதனால் ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் செய்வது என்பது எளிதானதாக இல்லை. இதனால் குழந்தைகள் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளியிலேயே பயோமெட்ரிக் அப்டேட் செய்து ஆதார் வழங்கும் பணியில் இந்திய அஞ்சல் துறை மேற்கொள்ள போகிறது.

தபால் துறை அறிவிப்பு
அதன்படி, பள்ளிக்கல்வித் துறையின் கீழ் படித்து வரும் 5 முதல் 7 வயது வரை மற்றும் 15 முதல் 17 வயது வரைக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கான ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிக்கும் பணியினை இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து அஞ்சல் குறியீட்டு எண் அடிப்படையில் பள்ளிகள் பட்டியலிடப்பட்டு அஞ்சலகப் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழக அரசு அரசாணை
இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறுகையில், " பள்ளி மாணவர்களின் நலனுக்காக 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை அனைத்து மாணவர்களுக்கும் குறித்த நேரத்தில் முறையாக சென்று சேருவதை உறுதி செய்யும் விதமாக, நேரடி பயனாளர் பரிமாற்றம் (டிபிடி) மூலம் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் அவசியம்
இதை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு புதிதாக வங்கிக் கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கட்டாய பயோ மெட்ரிக் விவரங்களுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை பெற வேண்டியது அவசியமாகும்.
அதன்படி 5 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இவர்களில் 5 முதல் 7 வயதுக்கு உட்பட்டவர்கள் முதல் முறை கட்டாய பயோ மெட்ரிக் விவரங்களை புதுப்பித்தல் வேண்டும். அதேபோல் 15 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 2-வது முறை கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, பள்ளிக் கல்வித் துறையில் பயின்று வரும் 5 முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 15 லட்சம் மாணவர்களுக்கு கட்டாய பயோ மெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
பயோமெட்ரிக் புதுப்பித்தல்
இந்திய தபால் துறையானது பள்ளி மாணவர்களுக்கு பயிலும் பள்ளியிலேயே முகாம் அமைத்து அஞ்சல் சேமிப்பு கணக்கு தொடங்கும் பணிகளை கடந்த ஆண்டு முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இத்துடன் சேர்த்து மாணவர்களுக்கு ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வது எளிதானது என இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இந்திய அஞ்சல் துறையானது ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணியை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை நடைபெறும்
அஞ்சல் குறியீட்டு எண் அடிப்படையில் பள்ளிகள் பட்டியலிடப்பட்டு, அஞ்சலகப் பணியாளர்கள் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணி மேற்கொள்ள ஒப்புதல் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த பணியானது ஆகஸ்ட் தொடங்கி வரும் டிசம்பர் மாதத்துக்குள் 2 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட உள்ளன. இதன் மூலம் 15 லட்சம் மாணவர்களின் ஆதார் கட்டாய பயோமெட்ரிக் விவரம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications