ஆதார் கார்டில் திருத்தம் பண்ணனுமா.. இனி அலைய வேண்டியதில்லை.. UIDAI கொண்டுவரும் சூப்பர் வசதி!
சென்னை: ஆதார் கார்டில் (Aadhaar card) திருத்தங்களை இனி வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ளும் வகையில் ஆதார் இ செயலி சேவை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த இ-ஆதார் செயலி அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த இ-ஆதார் செயலி மூலம் பயனர்கள் முக்கியமான தகவல்கள், அதாவது பெயர், குடியிருக்கும் வீடு உள்ளிட்ட தகவல்களை கூட ஸ்மார்ட்போனில் இருந்தே அப்டேட் செய்ய முடியும்.
இன்று ஒவ்வொரு இந்தியரின் அடையாளமாக ஆதார் கார்டு விளங்குகிறது. வீட்டு முகவரி முதல் டிக்கெட் புக்கிங் செய்வது வரை எல்லாவற்றிற்கும் ஆதார் முக்கிய ஆவணமாக தேவைப்படுகிறது. அரசு சேவைகள் பெற விண்ணப்பிப்பதற்கும், உதவித் தொகை பெறுவதற்கும் முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை பயன்படுகிறது.

எனினும் சில நேரங்களில் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) பெறுவதற்கும் இப்போது ஆதார் கார்டு கேட்கப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் குடும்ப அட்டையில் உள்ள முகவரி போல் இல்லாமல், ஆதார் கார்டில் வேறு முகவரி இருந்தால் அதனை திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு நாம் குடும்ப அட்டையை ஆதாரமாக கொண்டு திருத்தம் செய்யலாம்.
இதேபோன்று ஆதார் அட்டையில் பெயர் மாற்றம், வயது மாற்றம், இருப்பிடம் மாற்றம், திருமண நிலை என அவ்வப்போது சில மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஆதார் சேர்க்கைக்காக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி தலைமையகங்கள், நகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில் பி.இ.சி மையங்களை ELCOT நிறுவியுள்ளது.
இங்கு சென்று அதற்கான ஆவணங்களை கொடுத்து மாற்றம் செய்து கொள்ளலாம். பின்பு மாற்றம் செய்யப்பட்ட ஆதார் கார்டு, விண்ணப்பித்த 2 வாரங்களுக்குள் வீட்டிற்கு வந்துவிடும். எனினும் செல்போனிலோ, ஆன்லைனிலோ தனிநபரால் இந்த மாற்றங்களை செய்யும் வசதி இன்னும் கொண்டு வரப்படவில்லை. இந்த நிலையில் தான் ஆதார் கார்டுகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் 'ஆதார் இ-செயலி' கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த இ-ஆதார் செயலி அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த இ-ஆதார் செயலி மூலம் பயனர்கள் முக்கியமான தகவல்கள், அதாவது பெயர், குடியிருக்கும் வீடு உள்ளிட்ட தகவல்களை கூட ஸ்மார்ட்போனில் இருந்தே அப்டேட் செய்ய முடியும்.
ஆதார் மையங்களுக்கு நேரில் சென்று மக்கள் அலைவதை தவிர்க்கும் விதமாக இந்த வசதியை கொண்டு வர, ஆதார் ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நவம்பர் 2025 முதல் பயோமெட்ரிக் தகவல்களை உறுதிப்படுத்த மட்டுமே மக்கள் ஆதார் மையங்களுக்கு நேரில் செல்வது போல இருக்கும்.
இதர அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலமே கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஆதாரில் திருத்தம் மேற்கொள்ள பயனர்கள் வரும் போது அடையாள மோசடி நடப்பதை தடுக்கும் வகையில், விரைவாக சேவை கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக இந்த வசதியை கொண்டுவர தனித்துவ அடையாள ஆணையம் முடிவு செய்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications